10
April, 2026

A News 365Times Venture

10
Friday
April, 2026

A News 365Times Venture

'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' – நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனிவாசன்

Date:

பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பேற்ற நயினார் நாகேந்திரன் கோவை வருகை புரிந்தார். அவருக்கு கோவை பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் பேசும்போது,

வானதி சீனிவாசன்

“பொதுவாக பொறுப்பு கிடைத்தால் கையில் சாலுடன், பிற தலைவர்களை பார்க்க போவார்கள். நம் தலைவர் நயினார் நாகேந்திரன் தொண்டர்களை பார்க்க வந்துள்ளார்.

முன்னாள் தலைவர்கள் உழைப்பை..!

பாஜகவை பொறுத்தவரை யார் கட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இரட்டை இலக்கத்தில் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்ப போகும் மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இருப்பார். சி.பி ராதாகிருஷ்ணன், பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தாமரையை வளர்க்க அரும்பாடுபட்டனர். 

பாஜக நிகழ்ச்சி

இன்று இருக்கக் கூடிய தலைவர்கள் முன்னாள் தலைவர்கள் உழைப்பை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியால் புதிய கருத்துருகளை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை கொண்டு வந்தார். 

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கு, எதுவுமே இல்லாமல் பெரிய பூஜ்ஜியத்தை மக்கள் பரிசாக அளித்தார்கள். அடுத்து வரக் கூடிய சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சித் தேர்தலிலும் கோவை மாவட்டம் திமுகவுக்கு பூஜ்ஜியத்தை பரிசாக பரிசளிக்க வேண்டும்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அந்த இலக்கை நோக்கி நாம் அனைவரும் பணி செய்ய வேண்டும். நயினார் நாகேந்திரன் காலகட்டம் சிறப்பாக அமைய வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துகளை பகிர்ந்து கொள்கிறேன்.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'அமெரிக்கா போனால் போகாட்டும்' NATO-விற்கு வேறு ஐடியா சொல்லும் ஜெலன்ஸ்கி; அதில் உக்ரைனுக்கு லாபம்

'நமக்கு வேண்டியபோது உதவவில்லை; இனியும் தேவை வந்தால் உதவமாட்டார்கள்' என்று ஈரான்...

“எடப்பாடி தொகுதிக்கு… விஜய் போட்ட புதிய ஸ்கெட்ச்” – விரைவில் அதிரடி அறிவிப்பு!

234 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய த.வெ.க கட்சி, எடப்பாடி தொகுதியில் போட்டியிட...

"அஸ்ஸாமில் வாக்களிக்க 50,000 பேர் உ.பி-யிலிருந்து வந்திருக்கின்றனர்" – மம்தா 'பகீர்' குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. தேசியத்...

வானதி சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அட்மிட் – காரணம் என்ன?

பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கோவை வடக்கு...