17
February, 2026

A News 365Times Venture

17
Tuesday
February, 2026

A News 365Times Venture

“விஜய் ஒரு நாளும் எம்ஜிஆர் ஆக முடியாது…" – ஜெயக்குமார் விமர்சனம்

Date:

2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு என்றும் அது ஒரு நாளும் நிறைவேறாது என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியிருக்கிறார்.

செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “தமிநாட்டு மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள்தான் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கிறார்கள். திமுகவிற்கு மாற்று அதிமுக-தான். இன்று எதிர்கட்சிகள் இருக்கலாம். ஆனால் பிரதான எதிர்கட்சி அதிமுகதான். அந்த ஒரு அடிப்படையில் மக்கள் எங்களுக்கு ஆதரவை அளிப்பார்கள். அதனால் மீண்டும் அம்மாவின் அரசு பொதுச்செயலாளர் தலைமையில் மலரும். இது 2026-ல் நடக்கும்.

ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர்

புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் அவர்களது கட்சிக்காரர்களை திருப்திப்படுத்துவதற்காக 2026-ல் ஆட்சி அமைப்போம் என்று சொல்லலாம். அது அவர்களது உரிமை. அதை நாம் ஏன் இப்படி சொல்கிறீர்கள் என்று கேட்டு வாயை மூடி விடமுடியுமா? 2026 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்கும் என விஜய் பகல் கனவு காண்கிறார். கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த எம்ஜிஆர் உடன் தன்னை ஒப்பிடுகிறார். ஆனால், விஜய் ஒரு நாளும் எம்ஜிஆர் ஆக முடியாது” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`அண்ணன் தம்பிக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை' – மாணிக்கம் தாகூர் 'பளீச்' பதில்

நாடு முழுவதும் நடைபெறவுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் (Census), சீர்மரபினர் (DNT)...

பட்ஜெட் 2026: “இது விடியா அரசின் கடைசி அத்திப்பழ பட்ஜெட்" – எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!

தமிழக சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை...

மதுரை: மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர் பி.எம்.மன்னன் அதிமுக-வில் இணைந்தார்!

மதுரை மாவட்டத்தில் தி.மு.க-வின் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஒரு கால...

மத்திய அரசின் நிதிப்பகிர்வு: தங்கம் தென்னரசு அடுக்கிய குற்றச்சாட்டுகள் என்னென்ன? | Full list

இன்னும் இரண்டு மாதங்களில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. இதையடுத்து...