19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

மேகதாது விவகாரம்: “உதயநிதி ஸ்டாலின் ஏன் Silent Mode-ல் இருக்கிறார்?" – மாணிக்கம் தாக்கூர் MP கேள்வி

Date:

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயல்வதற்கு எதிரான தமிழ்நாடு அரசின், தீர்ப்பு மறுஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இந்தச் சூழலில், அங்கு விரைவில் பூமி பூஜை நடத்தப்படும் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் அறிவித்துள்ளார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் உரிமைகளையும் விவசாயிகள் நலனையும் காக்கக் கோரி முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடிக்கு நேரடியாகக் கடிதம் எழுதியுள்ளார்.

ஆனால், இவ்விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஏன் இன்னும் அமைதியாக (Silent Mode) இருக்கிறார் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின்

இது தொடர்பாக எம்.பி.மாணிக்கம் தாக்கூர் சமூக வலைத்தளப் பதிவில், “Opposition leader உதயநிதி அவர்கள் இந்த issueல silent mode ஏன்? இப்போதும் CM திரு C. ஜோசப் விஜய் அவர்கள் directஆ PMக்கு letter எழுதி, Tamil Nadu rights-காக strongஆ stand எடுத்திருக்கார்.

ஆனா “connecting call” பேசுற Ex CM பழனிசாமி அவர்கள்… opposition leader உதயநிதி அவர்கள்… அதுக்கப்புறம் ஏன் நேரடியாக மோடியிடம் question கேக்கல?

PM Narendra Modi அவர்கள் உடனடியாக Mekedatu proposal-ஐ reject பண்ணி, காவிரி நீரில் தமிழ்நாட்டின் rightful share-ஐ protect பண்ணணும்.

CM letter clearஆ சொல்லுது இந்த project Supreme Court judgment-க்கும், Cauvery Tribunal final order-க்கும் எதிரானது. மேலும் லட்சக்கணக்கான தமிழக விவசாயிகளின் வாழ்க்கையையும் பாதிக்கும். இது politics matter இல்ல. இது நம்ம water… நம்ம farmers… நம்ம Tamil Nadu rights.

Tamil Nadu approval இல்லாமல் காவிரியில் எந்த projectமும் வரக்கூடாது. CM letter-க்கு full support. Tamil Nadu rights காக unitedஆ நிற்போம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' – அவையில் கடுப்பான சபாநாயகர்

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் அவையில் நடந்து வருகிறது....

`அமெரிக்க அதிபர்தான் பிரச்னை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால்.!'- துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் காட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில்,...

`மக்கள் முதுகில் குத்தாதீர்கள்’ – எம்.எல்.ஏ வழக்கில் புதுச்சேரி அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

`வருமானத்துக்கு அதிகமாக ரூ.106 கோடி சொத்து!’புதுச்சேரி 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்...