24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

பாசிட்டிவ் ரூட்டில் ஈரான் போர் நிறுத்தம்? 'நவம்பருக்கு பின் ஒப்பந்தம்' – ட்ரம்ப் சொன்ன தகவல்கள்!

Date:

ஈரான் போர் அடுத்தடுத்து பாசிட்டிவ் நகர்வுகளை நோக்கி நகர்ந்து வருகிறது.

“அமெரிக்கா எங்களின் 7 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால் போர் விரைவில் முடியும்… ஹார்முஸ் நீர்ச்சந்தி திறக்கப்படும்” என்று ஈரான் தரப்பிலிருந்து கிரீன் சிக்னல் கடந்த வார இறுதியில் வந்தது.

நேற்று இன்னும் 7 நாள்களில் ஹார்முஸ் திறக்கப்படும் என்று வேறு ஈரான் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகிறது.

போர் முடிந்துவிடும்… ஹார்முஸ் திறக்கப்பட்டுவிடும் போன்ற வார்த்தைகள் எப்போதும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் சொல்வார். ஆனால், இந்த முறை ஈரானிடமிருந்து வந்திருக்கிறது என்பதே நல்ல முன்னேற்றம்தான்.

ஹார்முஸ் நீர்ச்சந்தி

அமெரிக்காவில் ஈரான் அதிபர்

தற்போது ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் அமெரிக்காவில் உள்ள நியூயார்க்குக்குச் சென்றிருக்கிறார்.

எந்த நாட்டுடன் போர் நடக்கிறதோ, அதே நாட்டிற்கு எதிர்தரப்பு அதிபர் சென்றிருப்பது உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது.

ட்ரம்ப் பேச்சு

நேற்று (செப்டம்பர் 22) ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், “நான் ஒரு மிகப்பெரிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது.

ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் போட்டு, அவர்கள் மீண்டும் தங்களைச் சீரமைத்துக்கொண்டு, மத்திய கிழக்கிலோ… ஏன் உலகிலேயே கூட மிகச் சிறந்த ஒரு நாடாக உருவெடுக்க வழிவகுப்பதா?

அல்லது ஈரானிய இஸ்லாமியக் குடியரசை உடனடியாக அழித்து, இனி யாரையாவதையோ அல்லது நாட்டையோ அவர்கள் கொல்வதற்கும் அழிப்பதற்கும் மீண்டும் ஒரு வாய்ப்பே இல்லாதவாறு செய்வதா?” என்று பேசியிருந்தார்.

கூடவே, வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க உள்ள மிட்-டேர்ம் தேர்தலுக்குப் பிறகு, ஈரானுடன் ஒப்பந்தம் ஏற்படலாம் என்றும் கூறியிருந்தார்.

நல்ல முறையில்…

முன்பே சொன்ன மாதிரி, ஐ.நா. பொதுக்கூட்டத்திற்கு ஈரான் அமெரிக்கா சென்றிருக்கிறது.

ஈரான் அதிகாரிகளுடன் அமெரிக்க அதிகாரிகள் மூன்று மணிநேரம் நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடத்தி முடித்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

இப்போதைய சூழலில் பார்த்தால், ஈரான் போர் நிறுத்தம் பாசிட்டிவ் ரூட் எடுத்திருக்கிறது போலும்!

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`குடியுரிமைச் சட்டத்தின் பின்வாசல் வழி… தேர்தல் ஆணையத்தின் சரிவு.!' | எம்.ஜி.தேவசகாயம் EXCLUSIVE

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட...

"சிறு பிள்ளைக்குத் தெரியும் அரசியல்கூட த.வெ.க-வினருக்குத் தெரியவில்லை!" – இரா.முத்தரசன் வருத்தம்

'ஆட்சிக்கு ஆதரவு, அதேசமயம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு எதிராகப் போட்டி' என்ற கம்யூனிஸ்ட்...

“நாங்கள் யார் மீதும் போர் தொடுத்ததில்லை; எங்கள் மீது போர் திணிக்கப்பட்டது!” – ஐ.நா-வில் ஈரான் அதிபர்

ஈரான் போர் தொடர்ந்துகொண்டிருக்கும் இதே வேளையில், அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் ஈரான் அதிபர்...