5
September, 2026

A News 365Times Venture

5
Saturday
September, 2026

A News 365Times Venture

பட்டா வழங்குவதாக மலைவாழ் மக்களிடம் ரூ.1 கோடி லஞ்சம்? – வனத்துறை அலுவலர்கள் 6 பேர் அதிரடி சஸ்பெண்ட்

Date:

திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை பகுதிகளான ஜமுனாமரத்தூர், மேல்மட்டு, நாடனூர் உள்ளிட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வாழும் மலைவாழ் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்திருக்கின்றனர். இந்த நிலையில், அவர்களின் பயன்பாட்டில் இருக்கும் வனத்துறைக்குச் சொந்தமான நிலங்களுக்கு `பயன்பாட்டு உரிமை மாற்றுப் பட்டா’ வாங்கித் தருவதாகக் கூறி வனத்துறையினரே `தலைக்கு ரூ.5 லட்சம்’ என வசூல் வேட்டையில் இறங்கியதாகக் கூறப்படுகிறது. இப்படியே, சுற்றுவட்டார மலைக் கிராமங்களிலிருந்து லஞ்சப் பணமாக சுமார் ரூ.1 கோடி வரை வசூலித்து வாரிக் குவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பட்டா வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மலைவாழ் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

லஞ்சம்

தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர்களிடம் கேட்கும்போதெல்லாம் அவர்களின் மிரட்டல்களுக்கும் ஆளாகியிருக்கின்றனர். இதுதொடர்பான புகார் உயர்மட்ட அதிகாரிகளுக்குச் சென்றிருக்கிறது. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதால், திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் சுதாகர் துறைரீதியாக விசாரணை மேற்கொண்டு, முதற்கட்ட நடவடிக்கையாக குற்றச்சாட்டுக்குள்ளான வனச்சரக அலுவலர்கள் பிரபு, சுரேஷ், செங்குட்டுவன், வனக்காவலர் முத்து, வனவர்கள் அருணகிரி, சுப்பிரமணி ஆகிய 6 பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணையும் நடத்தப்பட்டு வருவதால், வனத்துறை வட்டாரத்தில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"அதானி சிமெண்ட் ஆலையால எங்க கிராமத்துக்கே மூச்சு திணறுது" – தவிக்கும் கோவை கிராம மக்கள்

கோவை மதுக்கரை பகுதியில் இயங்கி வரும் அதானி நிறுவனத்திற்குச் சொந்தமான ஏசிசி...

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? – அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும்,...

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' – ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி...

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" – கனிமொழி

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று...