24
October, 2026

A News 365Times Venture

24
Saturday
October, 2026

A News 365Times Venture

'நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?' – உண்மை என்ன?

Date:

முதல்வர் விஜய் அவர் வசிக்கும் நீலாங்கரை வீட்டை காலி செய்து பசுமைவழிச் சாலையில் உள்ள அரசு பங்களாவில் குடியேறவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தத் தகவலின் உண்மைத்தன்மையை அறிய தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம்.

TVK Vijay | விஜய்

முதல்வர் விஜய் வார நாட்களில் எல்லாம் தவறாமல் தலைமைச் செயலகத்துக்கு வந்துவிடுகிறார். தினமும் நீலாங்கரை வீட்டிலிருந்துதான் தலைமைச் செயலகத்துக்கு புறப்படுகிறார். நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகம் 18 கி.மீ தூரத்தில் இருக்கிறது.

முதல்வர் கிட்டத்தட்ட அரைமணி நேரம் பயணித்து தலைமைச் செயலகம் வர வேண்டியிருக்கிறது. இதனால் முதல்வரின் கான்வாய்க்கு பாதுகாப்பு வழங்குவதிலும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவதிலும் காவல்துறைக்கு சிக்கல் இருப்பதாக தகவல். இதைக் கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர்கள் வசிக்கும் பசுமைவழிச் சாலை பங்களாவில் குடியேறவிருப்பதாக ஆட்சியமைந்த சில நாட்களிலேயே ஒரு தகவல் வெளியானது. ஆனால், முதல்வர் தொடந்து நீலாங்கரை வீட்டிலிருந்துதான் தினசரி அலுவலகத்துக்கு வந்து சென்று கொண்டிருந்தார்.

CM Vijay
CM Vijay

இந்நிலையில் முதல்வருக்கென்று பிரத்யேகமாக பசுமைவழிச் சாலையில் உள்ள ‘எழில் இல்லம்’ புனரமைக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இதை முன்வைத்து முதல்வர் நீலாங்கரை வீட்டுக்கு பதில் அரசு பங்களாவுக்கு குடிபெயர்ந்து அங்கேயே தங்கப் போகிறார் என சமூகவலைதளங்களில் பேச்சு. இதுசம்பந்தமாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான சீனியர் அதிகாரிகள் சிலர், ‘முதல்வருக்கென ஒரு அரசு பங்களா புனரமைக்கப்பட்டு வருவது உண்மைதான். ஆனால், முதல்வர் நீலாங்கரை வீட்டிலிருந்து பசுமைவழிச் சாலைக்கு குடிபெயர்கிறார் என்பதில் உண்மை இல்லை. அங்கிருக்கும் அரசு பங்களா முதல்வருக்கான முகாம் அலுவலகமாக தயார் செய்யப்பட்டிருக்கிறது. முதல்வர் விருப்பப்பட்டால் அரசு பங்களாவில் வைத்து அதிகாரிகளையும் அமைச்சர்களையும் சந்திக்கலாம். ஆலோசனைக் கூட்டங்களை நடத்தலாம். எப்போதாவது வாரத்தில் ஒன்றிரண்டு நாட்கள் அங்கே தங்கலாம், அவ்வளவுதான்’ என்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தனுஷ் ரசிகர்கள் சந்திப்புக் கூட்டம்: இடம் கொடுத்த CM விஜய்க்கு நெருக்கமான கல்லூரி? விவரம் என்ன?

நடிகர் தனுஷ் தமிழக அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறார். தவெக, அதிமுக, அமமுக எனப்...

'ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?'- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக இருக்கிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர்...

“புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்…" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது....

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" – செல்லூர் ராஜூ காட்டம்

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில்...