24
October, 2026

A News 365Times Venture

24
Saturday
October, 2026

A News 365Times Venture

'ஆன்லைனில் இணைந்தவர்கள் எல்லாம் தவெக நிர்வாகிகளா?'- உதயநிதிக்கு அமைச்சர் ராஜ்மோகன் பதில்

Date:

தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் தொடர்கதையாக இருக்கிறது. கன்னியாகுமரியில் தவெக நிர்வாகி கிறிஸ்டோஃபர் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பு, நெல்லை, வேளாங்கன்னி போன்ற இடங்களில் எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, முதல்வர் விஜய் உறக்க நிலையில் உள்ளாரா? என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (அக். 23) கேள்வி எழுப்பியிருந்தார்.

உதயநிதி

இந்நிலையில் இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்மோகனிடம் கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “எந்தப் பாலியல் குற்றங்களையுமே நாங்கள் குறைத்து மதிப்பிடமாட்டோம். தவெக நிர்வாகி, தவெக நிர்வாகி என்று சொல்கிறார்கள். ஆன்லைனில் தங்களைத் தாங்களே இணைத்துக் கொண்டவர்கள் எல்லாம் நிர்வாகிகள் இல்லை.

மாநிலப் பொறுப்பு, கொள்கைப் பரப்புப் பணி, ஊடக அணிபோன்றவற்றில் இருந்தால்கூட சரி என்று சொல்லலாம். தவெகவில் பெரும்பாலும் ஆன்லைனில் இணத்துக் கொண்டவர்கள்தான். ஆனால், நம்மைப் பொறுத்தவரையில் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் பொறுப்பற்று இருந்தால் முதலில் கட்சியிலிருந்து நீக்குவோம்.

ராஜ்மோகன் - தவெக
ராஜ்மோகன் – தவெக

அடுத்து, காவல்துறையினரை அழைத்து அவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டிவிடாதீர்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுங்கள் என்று சொல்வோம். கட்சியிலிருந்து நீக்குவது கட்சி நடவடிக்கை; கைதுக்கே பரிந்துரைப்பது என்பது எங்கள் கொள்கை. இதைத் தாண்டி உதயநிதி ஸ்டாலின் சொல்வது அரசியல் குற்றச்சாட்டு” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'நீலாங்கரை வீட்டை காலி செய்து அரசு பங்களாவில் குடியேறுகிறாரா முதல்வர் விஜய்?' – உண்மை என்ன?

முதல்வர் விஜய் அவர் வசிக்கும் நீலாங்கரை வீட்டை காலி செய்து பசுமைவழிச்...

“புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்…" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது....

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" – செல்லூர் ராஜூ காட்டம்

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில்...

”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” – மேயர் பிரியா குற்றச்சாட்டு

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி...