18
May, 2026

A News 365Times Venture

18
Monday
May, 2026

A News 365Times Venture

`நாம் நேரு அண்ணனுக்கு நன்றி கடன்பட்டுள்ளோம்'- உணர்ச்சிவசப்பட்ட நிர்வாகி; மைக்கை வாங்கிய கே.என்.நேரு

Date:

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்டு, தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வெற்றி பெற்றுள்ளார்.

தனக்கு வாக்களித்து வெற்றிபெற வைத்த பொதுமக்களுக்கு அவர் நன்றி சொல்லி வருகிறார். அந்த வகையில், காஜாமலை பகுதியில் கே.என்.நேரு திறந்த வேனில் நின்றபடி நன்றி தெரிவித்து வந்தார். அப்போது, கே.என்.நேரு அருகில் நின்ற தி.மு.க பிரமுகர் காஜாமலை விஜி மைக்கில் பேசினார்.

காஜாமலை விஜி – கே.என்.நேரு

அதில், ‘நம்ம ஊரும், நாமும் நேரு அண்ணனுக்கு என்றென்றும் நன்றி கடன்பட்டுள்ளோம்’ எனக் கூறியபோது விஜிக்கு தொண்டை அடைத்து மேடையிலேயே கண்ணீர் விட்டு அழத் தொடங்கியதால், அருகில் இருந்த கே.என்.நேரு சட்டென அவரது கையில் இருந்த மைக்கை வாங்கினார்.

அதோடு, மைக்கை அணைத்து கீழே வைத்த கே.என்.நேரு, வாகனத்தை உடனே கிளப்புமாறு உத்தரவிட்டார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`ஈரானின் 5 நிபந்தனைகளும் அமெரிக்காவின் 5 பதில் நிபந்தனைகளும்.!' – என்னவாகும் போர் நிறுத்தம்?

சீன பயணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் 'ஈரான்' மீது...

`திமுகவில் பொன்முடி ஓரம் கட்டப்பட்டதற்கு காரணமே சி.வி.சண்முகம் தான்!’ – பின்னணியை உடைக்கும் அதிமுக

`சிகரெட் பற்ற வைத்து முகத்தில் புகையை ஊதுவார்..’விழுப்புரம் அ.தி.மு.க-வின் தெற்கு நகரச்...

அட்டைப்படம்

Source link

‘எஸ்.பி. வேலுமணியிடம் பேசியது என்ன?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,...