7
May, 2026

A News 365Times Venture

7
Thursday
May, 2026

A News 365Times Venture

தவெக: “ஆளுநரின் நடவடிக்கை மாநில உரிமைகளுக்கு எதிரானது; இதைச் செய்யலாம்..!"- துரை வைகோ சொல்வது என்ன?

Date:

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால் தவெக தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதனால், காங்கிரஸ் தன் முழு ஆதரவையும் தெரிவித்திருக்கிறது. இதற்கிடையில் தவெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் ஆளுநரோ, பெரும்பான்மையை நிரூபிக்கும் வகையிலான ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை கேட்டிருக்கிறார். இதனால் தவெக தலைவர் விஜய் இன்று பதவிப் பிரமாணம் செய்யும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்டக் கட்சிகள் ஆளுநரின் செயல்பாடுகளை விமர்சித்திருக்கின்றன. திமுக தரப்பிலிருந்து, ‘ஆளுநருக்கு எதிராக இப்போதாவது தவெக தலைவர் ஏதாவது பேசுவாரா?’ என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்புகின்றனர்.

ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்

இந்த நிலையில், மதிமுக பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான துரைவைகோ தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம். ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது என்ற கவலையும் அடைகிறோம். ஏனெனில் தமிழ்நாட்டு மக்கள் சட்டமன்றத் தேர்தல்களில் மிகத் தெளிவான தீர்ப்பை இதுவரை வழங்கி இருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் தான் இது போன்ற ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிற மரபை கருத்தில் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் விரைந்து முடிவு எடுக்க வேண்டும். 1983-இல் மத்திய-மாநில உறவுகள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் , ஒரு மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வழிகாட்டுதல்களை பரிந்துரைத்துள்ளது.

பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில் (Hung Assembly) ஆளுநர் கீழ்க்கண்ட வரிசைப்படி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் .

1.தேர்தலுக்கு முந்தைய கூட்டணி (Pre-poll Alliance): தேர்தலில் போட்டியிடும்போதே கூட்டணி அமைத்து, அதிக இடங்களைப் பெற்று, அந்த கூட்டணியின் தலைவர் ஆட்சி அமைக்க உரிமை கோரினால், ஆளுநர் அவரை அழைக்க வேண்டும்.

தவெக விஜய்
தவெக விஜய்

2.தனிப்பெரும் கட்சி (Single Largest Party): தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எந்தக் கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லை என்றால், அதிக இடங்களைப் பெற்ற தனிக் கட்சியின் தலைவரை ஆளுநர் அழைக்கலாம்.

3.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி (Post-poll Coalition – Type 1): தேர்தலுக்குப் பிறகு, கட்சிகள் இணைந்து பெரும்பான்மையை நிரூபித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினால் அவர்களை அழைக்கலாம்.

4.தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி (Post-poll Coalition – Type 2): சில கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்து, பிற கட்சிகள் அல்லது சுயேச்சைகள் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாகக் கூறினால், அந்த கூட்டணித் தலைவரை அழைக்கலாம்.  ஆளுநர் நியமிக்கும் முதல்வர், சட்டப்பேரவையில் (Floor of the House) நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும்.

ஆளுநர் மாளிகையில் பெரும்பான்மையை சோதிக்கக் கூடாது. இதே போன்ற பரிந்துரைகளையே எம்.எம்.பூஞ்சி கமிஷனும் அளித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் தொங்கு சட்டமன்றம் அமைந்த போது மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இரண்டும் சேர்த்து 116 இடங்களைப் பெற்றிருந்தன.

துரை வைகோ
துரை வைகோ

ஆனால் அப்போதைய கர்நாடகா ஆளுநர் வாஜூபாய் ரூடாபாய் வாலா, 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பாஜகவை தனிப் பெரும் கட்சியாக அங்கீகரித்து கட்சியின் தலைவர் பி.எஸ். எடியூரப்பா அவர்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.

அதே நிலை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டிருக்கும் சூழலில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரை ஆட்சி அமைக்க தாமதிக்காமல் அழைப்பு விடுக்க வேண்டும். இதற்கு மாறாக மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் ஜனநாயகத்திற்கு எதிரானது; அரசியல் சட்டத்திற்கு புறம்பானது; மாநில உரிமைகளுக்கு எதிரானது; மேலும் தமிழ்நாட்டு மக்கள் அளித்திருக்கும் தீர்ப்புக்கும் எதிரானது என்பதை உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தவெக: “அடுத்த எம்.ஜி.ஆர்; அதிமுக ஆதரவளித்து…" – ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்கும் தம்பி ராமையா

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில்,...

கட்சி அலுவலகத்தில் பெண் MLA-வை கட்டியணைக்க முயன்ற கேரள காங்கிரஸ் நிர்வாகி; அநாகரிக செயலால் சர்ச்சை!

திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி (KPCC) அலுவலகத்தில் நடந்த...

விசிலடிக்காத 8 மாவட்டங்கள் `டு' 10 ஆண்டுகளுக்கு பின் சட்டசபை செல்லும் கட்சி – 2026 தேர்தல் ஹைலைட்ஸ்

முதல்வர் வேட்பாளர்கள்... ஷாக், சர்ப்ரைஸ்!2026 சட்டசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக நான்கு...

தவெக: ஆளுநருக்கு எதிராகவும், பாஜக-வுக்கு எதிராகவும் போராட்டம்! – தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கத் தேவையான 118 தொகுதிகளில் தவெக வெற்றிபெறவில்லை. அதனால்...