12
May, 2026

A News 365Times Venture

12
Tuesday
May, 2026

A News 365Times Venture

“தலித் ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை" – திருமாவளவன் விளக்கம்

Date:

விசிக மீதான விமர்சனம் குறித்து, விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசிய சில கருத்துகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமாவளவன் தன் எக்ஸ் பக்கத்தில் தன் கருத்து குறித்து விளக்கமளித்திருக்கிறார். அவர் பதிவில், “இன்று செய்தியாளர்கள் சிலர் என்னை சந்தித்தார்கள். அப்போது பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள்.

அப்போது, “தங்களை முதல்வராக்க நடந்த முயற்சியை காங்கிரஸ் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்களே” – என்று ஒருசெய்தியாளர் கேட்டார். அதற்கு நான், ‘ அப்படியொரு முயற்சி நடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்தது’ என்று பதிலளித்தேன்.

எனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் என்னை அணுகி அதைப் பற்றி பேசினார்கள் என்பதையே கூறினேன். ‘திமுகவோ அதிமுகவோ அதிகாரபூர்வமாக யாரும் என்னை அப்படி அணுகவில்லை. நானும் யாரிடமும் பேசவில்லை.

திருமாவளவன்

நேற்றும் இன்றும் இது குறித்து ஊடகங்களில் உறுதிபடுத்தப்படாத செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தான் அவ்வினாவுக்கு நான் விளக்கமளித்தேன். ஆனால், அதனை வேறு பொருள்படும்படி தலைப்பிட்டு செய்திகளைப் பரப்பி பரபரப்பை ஏற்படுத்துவது ஊடக அறமில்லை.

தமிழ்நாட்டில் தலித் சமூகத்தைச் சார்ந்த ஒருவர் முதல்வர் ஆகும் அளவுக்கு தமிழ்ச் சமூகம் இன்னும் தயாராகவில்லை என்பது அனைவரும் அறிந்த கசப்பான உண்மையாகும்.

இந்தியாவில் உத்தரபிரதேசம், ஆந்திரா, மகாராஷ்ட்ரா, பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலித்துகள் முதலமைச்சர்களாக ஆட்சி பீடத்தில் கோலோச்சிய வரலாறு நடந்தேறியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் ஒரு நூறாண்டானாலும் அது கனவாகவே இருக்கும் என்பதை அறிந்தவன் நான்.

எனினும், இன்றைய அரசியல் சூழலில் அப்படியொரு பேச்சு நடந்ததாக சொல்லப்பட்டது. ஆகவே, ‘எனக்கும் தகவல் கிட்டியது’ என்று ஒரு ஊடகப் பணியாளரின் கேள்விக்கு நான் விடையளித்தேன்.

அதனைத் திரித்து ‘பிறிதொரு பொருளைத்தரும் உள்நோக்கத்தோடு’ ஒருசில ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது வேதனையளிக்கிறது.” ஏனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`விஜய்யின் முதன்மை செயலாளரான ஆஸ்தான ஜோதிடர்' – ஊத்துக்குளி வெற்றிவேல், ரிக்கி ராதன் பண்டிட் ஆன கதை!

தமிழக முதல்வரின் சிறப்பு அரசியல் செயலாளர் என்கிற பதவிக்கு த.வெ.க-வின் செய்தி...

துரைமுருகனின் அறையில் ஆனந்த்; கே.என்.நேரு அறையில் அருண்ராஜ்! – தலைமைச் செயலக சுவாரஸ்யங்கள்!

தவெக தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்று 3 நாட்கள் ஆகிறது. திமுக,...

தகர்த்த செந்தில் பாலாஜி; கொடியேற்றிய விஜய்… `கோட்டை'யில் கோட்டைவிட்ட அதிமுக!

“கோவை என்றைக்கும் அண்ணா தி.மு.க கோட்டை. எனவே, கோவையில் அனைத்து தொகுதிகளிலும்...

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும்...