25
August, 2026

A News 365Times Venture

25
Tuesday
August, 2026

A News 365Times Venture

`தமிழ்நாட்டு மண்ணில் நின்று பிரதமர் மோடி உத்தரவாதம் தர வேண்டும்!'- ஸ்டாலின் கோரிக்கை என்ன?

Date:

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைத் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின், ஊட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் தலைமையேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் மிகப்பெரிய சதியை ஒன்றிய அரசு நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகையை முறையாக கட்டுப்படுத்தி வரும் தென்மாநிலங்களில் மக்கள் அடர்த்தி குறைவு என்கிற பெயரில் தொகுதி எண்ணிக்கையை குறைக்க இருக்கிறது. நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்களின் உரிமையைப் பறிக்கிறது இந்த ஒன்றிய அரசு.

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் நெரிக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் கூட்டத்தை நடத்தினேன். இது குறித்து பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். விரைவில் நேரம் ஒதுக்குவார் என நம்புகிறோம். இன்றைக்கு ஊட்டியில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க வேண்டிய காரணத்தால் பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் நிகழ்ச்சியில் என்னால் பங்கேற்க முடியவில்லை. ஆனால், தமிழ்நாடு வந்திருக்கும் பிரதமர் மோடி நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு என்கிற பெயரில் தமிழ்நாட்டின் குரலை நசுக்கும் சதி திட்டத்தை தொடர மாட்டோம் என தமிழ்நாட்டு மண்ணில் நின்று உத்தரவாதம் தர வேண்டும்‌ என கோரிக்கையாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'தவெக எம்.எல்.ஏ சொன்ன வார்த்தை; அடிக்க பாய்ந்த திமுக எம்.எல்.ஏக்கள்?' – அவையில் கடும் அமளி!

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில்...

"சேகர் பாபு மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் வருத்தம்…" – என்ன சொல்கிறார் உதயநிதி?

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளையொட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

விஜயகாந்த் பிறந்தநாள்: "மக்கள் நலனை முன்னிறுத்திய தலைவரின் புகழ் நிலைத்தோங்கட்டும்" – முதல்வர் விஜய்

தேமுதிக நிறுவனரும், நடிகருமான மறைந்த விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது....

"அது நான்தான்; அமைச்சர் கீர்த்தனா இல்ல" – மலேசியா பெண் வெளியிட்ட விளக்க வீடியோ

சமீபத்தில் காரில் இருந்து ஒரு பெண் இறங்குவது போன்ற வீடியோ சமூக...