24
October, 2026

A News 365Times Venture

24
Saturday
October, 2026

A News 365Times Venture

ஞானேஷ் குமார்: “எதிர்க்கட்சிகள் பதவி நீக்க நோட்டீஸ் கொடுத்தால் நடவடிக்கை எடுப்போம்" – ஓம் பிர்லா

Date:

தேர்தல் குளறுபடி, எஸ்.ஐ.ஆர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளால் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகளும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால், இதுவரை அரசு தரப்பிலிருந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அதனால் எதிர்க்கட்சிகள் மீண்டும் புதிய போராட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, “எதிர்க்கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணையர் பதவி நீக்கக் கோரி நோட்டீஸ் எனக்கு முறைப்படி வந்தால், நாடாளுமன்ற விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளின்படி நான் தகுந்த முடிவை எடுப்பேன்.

ஞானேஷ் குமார்

முன்னதாக எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால், அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி நீக்க நடவடிக்கைக்கான உயர் தகுதிகளை அந்த நோட்டீஸ் நிறைவு செய்யவில்லை. தலைமைத் தேர்தல் ஆணையரை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடைமுறை, உச்ச நீதிமன்ற நீதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடைமுறையைப் போன்றதே.

தேர்தல் ஆணையத்தையும் அரசையும் விமர்சிக்கும் இந்தப் போராட்டத்தைச் சுற்றியுள்ள அரசியல் குறித்த மேலதிக கேள்விகளை அரசியல் கட்சிகளிடமே கேட்க வேண்டும். எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர் அமைப்புகளின் போராட்டங்கள் இந்தியாவின் ஜனநாயக வலிமையை வலியுறுத்துகின்றன. ஜனநாயகம் என்பது நம் நாட்டின் அமைப்பிலேயே ஆழமாக ஊடுருவியுள்ளது.

உலகில் என்ன நடந்தாலும் அது இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நமது கலந்துரையாடல் மற்றும் பேச்சு சுதந்திர அமைப்பிலிருந்து உலகமே பயனடைய வேண்டும் என்பதே நமது முயற்சியாக இருக்கும்.

ஓம்.பிர்லா

ஆகஸ்ட் 13 அன்று காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனக் காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 85-வது பிரிவு இந்த விவகாரத்தை முழுமையாக உள்ளடக்கியுள்ளது. கடந்த காலங்களிலும் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நீண்ட காலத்திற்கு முடிவுக்குக் கொண்டுவரப்படாமல் இருந்த நிகழ்வுகள் உண்டு. இதில் சபாநாயகருக்கு எந்தப் பக்கச்சார்பும் இல்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் காங்கிரஸ் தரப்பிலிருந்து, “நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவுக்குக் கொண்டுவராததன் மூலம், அரசே குறுகிய கால அவகாசத்தில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட முடியும். 2029-ம் ஆண்டு முதல் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கும், தொகுதி மறுவரையறை மூலம் கீழ் அவையின் பலத்தை சுமார் 50% உயர்த்துவதற்கும் தேவையான அரசியலமைப்புத் திருத்த மசோதாவை மீண்டும் கொண்டுவர NDA கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைத் திரட்ட முயல்கிறது. அதற்காகவே இந்த முடிவு திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குற்றம்சாட்டப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" – செல்லூர் ராஜூ காட்டம்

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில்...

”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” – மேயர் பிரியா குற்றச்சாட்டு

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி...

“தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" – அமைச்சர் ராஜ் மோகன்

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது....