24
October, 2026

A News 365Times Venture

24
Saturday
October, 2026

A News 365Times Venture

கோவை மாணவன் தற்கொலை: "பள்ளிகள் சாதிவெறிக்கான களமாவதை தவெக அரசு தடுக்க வேண்டும்" – உதயநிதி

Date:

கோயம்புத்தூர், பீளமேடு அருகே உள்ள அரசு உதவிபெறும் ஸ்ரீ கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த தலித் மாணவர் அகிலன் தற்கொலை செய்துக்கொண்டிருக்கிறார்.

மாட்டிறைச்சி உண்பதைக் காரணமாகக் கொண்டு சக மாணவர்களால் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகிலன்

இதுகுறித்துப் பெற்றோரிடமும் வகுப்பாசிரியரிடமும் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் காட்டிய அலட்சியம் அவரது தற்கொலைக்குக் காரணமாக அமைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்தச் சம்பவத்திற்கு எதிராக அரசியல் தலைவர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் தனது கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “கோவையில் பள்ளியில் ஏற்பட்ட சாதிய பாகுபாட்டினால் 15 வயதுடைய ஒடுக்கப்பட்ட சமூக மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளையும் கைது செய்யாத இந்த டம்மி அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

அந்தப்பள்ளியில் மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மாட்டிறைச்சி உண்பதாகக் கூறிய சம்பந்தப்பட்ட மாணவன், சாதி ரீதியாக வன்கொடுமையை எதிர்கொண்டு இருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தச் சூழலில், கழகம் – முற்போக்கு அமைப்புகள் – மாணவனின் பெற்றோர்கள், உறவினர்களின் போராட்டத்துக்குப் பிறகு வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை, மாணவனின் மரணத்துக்குக் காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும்.

பள்ளிகள் சாதிவெறிக்கான களமாக்கப்படுவதை இந்த அரசு உடனே தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“புதிய நடிகர்கள் டெல்லியில் அமர்ந்திருக்கிறார்கள்: யார் வந்தாலும்…" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது....

"ரீல்ஸ் போட்டு கொண்டு சினிமா நடிகராக இருக்கலாமென நினைக்கிறார் முதலமைச்சர்" – செல்லூர் ராஜூ காட்டம்

மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ஸ்காட் ரோடு பகுதியில்...

”டெங்கு அதிகரிக்க தவெக-தான் காரணம், ஏனென்றால்.!” – மேயர் பிரியா குற்றச்சாட்டு

சென்னை கொரட்டூரில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சென்னை மாநகராட்சி...

“தவெக-வின் கடைசித் தொண்டன் இருக்கும் வரை பாஜக-வோடு ஒட்டுமில்லை, உறவுமில்லை" – அமைச்சர் ராஜ் மோகன்

ஐ.யூ.எம்.எல் கட்சியின் இளைஞரணி அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது....