17
February, 2026

A News 365Times Venture

17
Tuesday
February, 2026

A News 365Times Venture

சென்னை வேல் யாத்திரை: `தெளிவான உத்தரவு; தலையிட விரும்பவில்லை’ – மேல்முறையீடு வழக்கில் உச்சநீதிமன்றம்

Date:

இந்து கடவுளான முருகனின் கோயில் அமைந்துள்ள மதுரை திருப்பரங்குன்றம் மலையை, அங்குள்ள இஸ்லாமியர்கள் உரிமை கொண்டாடுவதாகவும், அந்த மலையை காக்கும் வகையில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி வழங்க கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணைத் தலைவரான எஸ்.யுவராஜ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்திருந்தது .

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த மனுதாரர், “சென்னையில் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோயில் வரை இந்த வேல் யாத்திரையை நடத்த திட்டமிட்டு இருக்கின்றோம். எனவே அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

திருப்பரங்குன்றம்

`நாங்கள் தலையிட விரும்பவில்லை’

இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு சார்பில், `இந்த விவகாரம் ஏற்கனவே முடிந்து போனது இதில் தேவையில்லாமல் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இப்படியான அனுமதி கேட்கப்படுகிறது. இதனால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், `ஏற்கனவே இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் மிகத் தெளிவான உத்தரவை பிறப்பித்திருக்கிறது. எனவே அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை’ என கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சசிகலா: `ஜெயலலிதா பிறந்த நாளில் கட்சி தொடங்க திட்டம்?' – பசும்பொன்னில் பந்தல்கால் நட்ட ஆதரவாளர்கள்!

மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி, பின்னர் தமிழரசி என்ற பத்திரிகையின் ஆசிரியராக...

தஞ்சாவூர்: “அந்த கூட்டத்தால் யாராலும் எதுவும் சாதிக்க முடியாது" – விஜயை சாடிய உதயநிதி

திமுக-வில் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டம்,...

காமராஜர் : அடித்தளமிட்ட சாத்தூர்; `முதல்’ தேர்தலிலேயே அன்னபோஸ்ட்டாக வென்றது எப்படி? | முதல் களம் 06

(`முதல் களம்’ - தமிழக தேர்தல் வரலாற்றில் பல்வேறு தலைவர்கள், பெரும்...

`திமுக ஆட்சி தேர்தலுக்கான ஆட்சி; தனிநபர் தாக்குதலில்..!' – நயினார் நாகேந்திரன்

மதுரையில் உள்ள  மண்டோலா நகரில்  மார்ச் 1 ஆம் தேதி நடக்கும்...