9
October, 2026

A News 365Times Venture

9
Friday
October, 2026

A News 365Times Venture

"கேரளாவில் AIIMS-க்கு அடிக்கல் நாட்டாமல் அடுத்த தேர்தலில் வாக்கு கேட்கமாட்டேன்" – சுரேஷ் கோபி ஆவேசம்

Date:

கேரளாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் நிலவும் காலதாமதத்தை எதிர்த்து காசர்கோடு பகுதியைச் சேர்ந்த மக்கள் கூட்டமைப்பு சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் பிரமாணப் பத்திரம் ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அதில், சுகாதாரக் கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ள மாநிலங்களுக்கே எய்ம்ஸ் அமைப்பதில் முதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும், கேரளம் ஏற்கெனவே சுகாதாரக் குறியீடுகளில் தேசிய அளவில் முன்னணியில் இருப்பதால், தற்போது கேரளாவுக்கு எய்ம்ஸ் அனுமதிப்பது மத்திய அரசின் முன்னுரிமைப் பட்டியலில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் அமர்வு, ஒரு மாநிலம் சுகாதாரத் துறையில் சிறந்து விளங்குவது எய்ம்ஸ் திட்டத்தைப் பெறுவதற்கான தகுதியிழப்பா என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியது.

மேலும், கேரளாவில் உள்ள அனைத்துச் சாமானிய மக்களாலும் தனியார் பெருநிறுவன மருத்துவமனைகளுக்குச் சென்று லட்சக்கணக்கில் செலவழித்து உயர் சிகிச்சை பெற முடியுமா என்றும், மக்கள் அடர்த்தி அதிகம் கொண்ட கேரளாவுக்கு எய்ம்ஸ் பெறுவதற்கான அனைத்துத் தகுதிகளும் இருப்பதாகவும் குறிப்பிட்ட நீதிமன்றம், மத்திய அரசின் பிரமாணப் பத்திரத்திற்கு அதிருப்தி தெரிவித்தது.

இந்த நிலையில், திருச்சூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய சுற்றுலா மற்றும் பெட்ரோலியத் துறை இணையமைச்சருமான சுரேஷ் கோபி திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான விளக்கம் அளித்தார்.

திருவனந்தபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில்.கலந்துகொண்ட சுரேஷ்கோபி

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறுகையில், “மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தற்போதைய முன்னுரிமைப் பட்டியலை மட்டுமே. திட்டத்தை நிராகரித்ததாக அர்த்தமல்ல. அதற்கான பதிலைத்தான் உயர்நீதிமன்றமும் மத்திய அரசுக்கு அளித்துள்ளது.

2025 ஜூன் மாதம் எர்ணாகுளம் வந்திருந்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா, கேரளாவில் சரியான நேரத்தில் எய்ம்ஸ் அமைக்கப்படும் என்று என்னிடம் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். இத்திட்டம் தொடங்கிய காலம் முதலே எய்ம்ஸ் விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சைகளே எழுப்பப்பட்டு வருகின்றன.

கேரளாவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வரும். இது மக்களுக்கு நான் நேரில் அளித்த வாக்குறுதி. குறைந்தபட்சம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லையாவது நாட்டாமல், அடுத்த தேர்தலில் நான் மக்களிடம் வந்து வாக்கு கேட்க மாட்டேன். இதைவிட உறுதியான ஒரு வார்த்தையை என்னால் எப்படித் தர முடியும்?

கேரளாவில் எய்ம்ஸ் அமைப்பதற்குத் தகுதியான குறைந்தபட்சம் 5 இடங்களின் திட்ட முன்மொழிவையாவது மாநில அரசு மத்திய அரசிடம் சமர்ப்பிதக்கவில்லை.

சுரேஷ்கோபி

ஆலப்புழாவா அல்லது திருச்சூரா எங்கு வேண்டும் என்பதை முதலில் கேரள அரசு தெளிவுபடுத்த வேண்டும். எய்ம்ஸ் அமைப்பதற்காக திருச்சூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தின் நிலம் உட்பட பல்வேறு வாய்ப்புகள் உள்ளன.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கே.முரளீதரனிடமும் நான் இதைத் தெளிவாகக் கூறினேன். ஆனால், மாநில அரசு அத்தகைய விரிவான திட்ட முன்மொழிவுகளை மத்திய அரசிடம் இதுவரை முறையாக வழங்கவில்லை.

தகுதியான நில முன்மொழிவுகளை மாநில அரசு சமர்ப்பிக்கும் பட்சத்தில், அதற்குரிய சரியான நேரத்தில் மத்திய அரசு கேரளாவுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை வழங்கும்” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சத்யபாமா உருவக்கேலி விவகாரம்: திருச்சியில் ஸ்டாலினுக்கு எதிராகப் புகாரளித்த தவெக மகளிர் அணி

கடந்த அக்டோபர் 2-ம் தேதி, இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருந்தார் தமிழ்நாட்டின்...

உத்தரப்பிரதேசம் தேர்தல்: காங்கிரஸ் VS சமாஜ்வாதி… தொகுதிப் பங்கீட்டில் மோதல் – பின்னணி என்ன?

உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சியினரிடையே வார்த்தை மோதல்...

"இதை என்னால் நம்ம முடியவில்லை, பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.!"- நானா படேகருக்கு குஷ்பு இரங்கல்

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மாரடைப்பால் இன்று (அக்.8) காலமாகி...

கைவிடப்படுகிறதா மறுசீரமைப்பு? ஸ்டாலின் கணக்கு டு ஓடிவந்த டிடிவி; ஒதுங்கி நின்ற எடப்பாடி!| கழுகார்

மோதிக்கொள்ளும் இஸ்லாமிய இயக்கங்கள்!''ஐ.யூ.எம்.எல் Vs ம.ஜ.க'தமிழக அரசியலில் ஐ.யூ.எம்.எல் கட்சியும், மனிதநேய...