19
June, 2026

A News 365Times Venture

19
Friday
June, 2026

A News 365Times Venture

குழந்தை பாலியல் வன்கொடுமை: 'பொறுப்பு' என்ற சொல்லுக்கு பொருள் தெரியாத ஆட்சியில்.!' – கனிமொழி கண்டனம்

Date:

கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு முட்புதரில் வீசப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் நேற்று மாலை 3 வயது குழந்தை காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், பொதுமக்கள் உதவியுடன் அந்த பகுதியில் தேடி உள்ளனர்.

அப்போது முட்புதரில் காயங்களுடன் குழந்தையை பார்த்த மக்கள் குழந்தையை மீட்டு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.

குழந்தை பாலியல் வன்கொடுமை| Represental images

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அக்குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்திருக்கிறது.

குழந்தை பாலியல் வன்கொடுமை தொடர்பாக பீகாரைச் சேர்ந்த மஞ்சி (19) என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக எம்பி கனிமொழி வெளியிட்டிருக்கும் கண்டன பதிவில், ” கும்மிடிப்பூண்டியில் சமூகவிரோதிகளால் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, முட்புதரில் வீசப்பட்ட செய்தி அறிந்து மனம் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

பெண்கள் அனைவரும் தங்களையும், தங்கள் குழந்தைகளையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அரசு என எதுவும் உள்ளதா என்று சந்தேகிக்கும் அளவுக்கு, இந்த மாநிலத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

‘பொறுப்பு’ என்னும் சொல்லுக்குப் பொருள் தெரியாதவர்கள் நடத்தும் ஆட்சியில், பொதுமக்களே தங்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?” என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`எத்தனை தடவை தேசிய கீதம் போடணும்னு நான் முடிவு பண்ணிப்பேன்!' – அவையில் கடுப்பான சபாநாயகர்

ஆளுநர் உரையின் மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் அவையில் நடந்து வருகிறது....

`அமெரிக்க அதிபர்தான் பிரச்னை என்று இஸ்ரேலில் யாராவது நினைத்தால்.!'- துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் காட்டம்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தத்திற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ள நிலையில்,...

`மக்கள் முதுகில் குத்தாதீர்கள்’ – எம்.எல்.ஏ வழக்கில் புதுச்சேரி அரசுக்கு குட்டு வைத்த நீதிமன்றம்!

`வருமானத்துக்கு அதிகமாக ரூ.106 கோடி சொத்து!’புதுச்சேரி 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரம்...