22
August, 2026

A News 365Times Venture

22
Saturday
August, 2026

A News 365Times Venture

'கண்ணின் இமை போல என்னைக் காத்து' – 41வது திருமண நாளில் மனைவியை நினைவுகூர்ந்த ஜேசிடி பிரபாகர்

Date:

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஜே.சி.டி. பிரபாகரின் மனைவி கிரேஸ் ஜெயந்தி கடந்த 2023-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இவர்களுக்கு இன்று 41-வது திருமண நாள்.

JCD Prabhakar – Grace Jayanthi

அதையொட்டி, கிரேஸ் ஜெயந்தியின் கல்லறையில் அஞ்சலி செலுத்தி, அவரை நினைவுகூர்ந்திருக்கிறார் ஜே.சி.டி. பிரபாகர்.

41-வது திருமண நாளையொட்டி அவருடைய மனைவி குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் அவர், “41 ஆண்டுகள்… ஒரு திருமண வாழ்க்கையின் நினைவுகள் மட்டுமல்ல; என் வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் பயணிக்கும் அன்பின் நினைவுகள்.

கண்ணின் இமை போல என்னைக் காத்து, அன்பிலும் அக்கறையிலும், ஆலோசனைகளிலும், வழிகாட்டுதலிலும் என்னை அரவணைத்த என் வாழ்க்கைத் துணையை, இந்த 41-ஆம் திருமண நாளில் நெஞ்சம் நிறைந்த அன்புடன் நினைவுகூர்கிறேன்.

என் இன்பத்திலும் துன்பத்திலும், வெற்றியிலும் சோதனைகளிலும் என்னுடன் நின்ற அந்த அன்பும் அரவணைப்பும் என் வாழ்வின் மிகப் பெரிய வரம். காலம் கடந்தாலும் சில உறவுகள் மறைவதில்லை.

அவை நினைவுகளாக மட்டும் இல்லாமல், நம் வாழ்வின் ஒரு பகுதியாகவே தொடர்ந்து வாழ்கின்றன. இன்று அவர் என்னுடன் இல்லை. ஆனால், அவர் தந்த அன்பும், அவர் விட்டுச் சென்ற நினைவுகளும் என் ஒவ்வொரு நாளிலும் என்னுடன் இருக்கின்றன.

41 ஆண்டுகள் கடந்தாலும், உன்னை நினைக்கும் அன்பும் நன்றியும் என்றும் மாறாது. என்றும் என் நெஞ்சில்…” எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘இந்தியாவிலேயே எங்கும் 'இது' நடந்திருக்காது; தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும்' – பெ.சண்முகம்

தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாக இடதுசாரிகளுக்கு எதிரான சில காட்சிகள் அரங்கேறின.இதை...

DMK: கைகொடுக்குமா சீரமைப்பு… தி.மு.க-வின் மாற்றங்கள் சொல்வதென்ன?

இன்று நடைபெற்றிருக்கும் தி.மு.க-வின் செயற்குழுவில், அமைப்புரீதியாக மாவட்டங்களை 110 எண்ணிக்கையாக உயர்த்தியும்,...

‘எங்களுக்கு கார் வேண்டாம், எம்.பி அலுவலகம் வேண்டும்’ – ஜோதிமணி எம்.பி கோரிக்கை

கோவை  திவ்யோதயா அரங்கில் நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரில் நடந்தது என்ன...

'அமைச்சருக்கு முன்பாக அறிவிப்பை வெளியிட்ட சேகர் பாபு!' – 'ஸ்பை' அதிகாரி; தவிப்பில் அமைச்சர் ரமேஷ்?

சட்டமன்றத்தில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதம் நடந்திருந்தது. அறநிலையத்துறையின் மீதான விவாதத்தின்...