27
October, 2026

A News 365Times Venture

27
Tuesday
October, 2026

A News 365Times Venture

“ஒரே நாளில் 17 கைதிகள் சிறையிலிருந்து தப்பிச் செல்லும் அவலநிலை நிலவுகிறது” – கனிமொழி சாடல்!

Date:

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி, ”தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து தமிழ்நாடு முழுவதும் கிட்டத்தட்ட 50 கைதிகளுக்கு மேல் சிறைகளில் இருந்து தப்பிச் சென்றிருக்கிறார்கள் என்று பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன. தேனி மாவட்டச் சிறையில் இருந்து ஒரே நாளில் 17 கைதிகள் தப்பித்துச் செல்லக்கூடிய அவல சூழ்நிலை இன்று தமிழ்நாட்டில் நிலவுகிறது.

கனிமொழி

காவல்துறையில் நடக்கக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது ஏதோ ஆளுங்கட்சிக்குக் குரல் கொடுப்பவர்களாக… அரசியல் தலைவர்களுக்கு ஆளுங்கட்சியினர்போல பதிலளிப்பது என்பது வருத்தப்படக்கூடிய சூழலை உருவாக்கி இருக்கிறது. காவல்துறையினர் அவர்களின் பணிகளைச் செய்ய வேண்டுமே தவிர ஆளுங்கட்சி ஐடி-விங்க் போலச் செயல்படக் கூடாது.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து விலைவாசியும் உயர்ந்து கொண்டே போகிறது. தொடர்ந்து எதிர்க்கட்சிகள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மகளிர் அணி சார்பில் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் வரும் 31-ம் தேதி சட்டம் ஒழுங்கு குறித்தும் விலைவாசி உயர்வு குறித்தும் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.

கனிமொழி

அனைத்தும் விலைவாசியும் ஏறிக் கொண்டிருக்கும் நிலையில், அரசு நேரடி கட்டுப்பாட்டில் உள்ள ஆவின் பொருள்கள் விலையையாவது கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அதையும் செய்யவில்லை ஆட்சிக்கு நேரடியாக கட்டுப்பாட்டில் இருக்கும் எதுவுமே… இந்த அரசின் கட்டுப்பாட்டில் இல்லை” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

DPDP: `பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாகும்'- வழக்கு தொடர்ந்த 21 செய்தி நிறுவனங்கள்; விவரம் என்ன?

டிஜிட்டல் செய்தி இணையதளங்களின் செயல்பாடுகளுக்கும் பத்திரிகைச் சுதந்திரத்துக்கும் மத்திய அரசின் தனிநபர்...

“மக்களுக்கு 'வெற்றி தீபாவளி' பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது"- இபிஎஸ்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஆவின் பால் பொருள்களின் ...

இந்தியா – சீனா எல்லை பிரச்னை: "எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை..!" – சீனா நிலைப்பாடு

2019-ம் ஆண்டு தொடங்கிய இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தொடங்கிய விரிசல் கடந்த...

"கைதிகள் தப்பிய நேரத்திற்கும், போலீஸுக்குத் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி" – அன்புமணி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இதில்...