27
October, 2026

A News 365Times Venture

27
Tuesday
October, 2026

A News 365Times Venture

இந்தியா – சீனா எல்லை பிரச்னை: "எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை..!" – சீனா நிலைப்பாடு

Date:

2019-ம் ஆண்டு தொடங்கிய இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தொடங்கிய விரிசல் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் ஓரளவு சரியாகி வருகிறது.

2025-ம் ஆண்டு சீனா சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்றார் இந்தியப் பிரதமர் மோடி. 2019-ம் ஆண்டு இரு நாடுகளின் எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, மோடியின் முதல் பயணம் அது.

2019-ம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த மாதம் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியா வந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

குவோ ஜியாகுன்

சீனாவின் நிலைப்பாடு

தற்போது இந்தியா-சீனா எல்லைப் பிரச்னை குறித்து தங்களுடைய நிலைப்பாட்டை சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் பேசியுள்ளார்.

“இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் பொதுவான புரிதல்களைச் சீனா கண்டிப்புடன் கடைப்பிடிக்கிறது.

மேலும், தனது பிராந்திய இறையாண்மையைப் பாதுகாக்கவும் எல்லைப் பகுதிகளில் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும் வழக்கமான எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சீனாவும் இந்தியாவும் தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைத் தொடர்புகளைத் தொடர்ந்து பேணி வருகின்றன.

இரு தரப்பிலும் எட்டப்பட்ட பொதுவான புரிதல்களை இணைந்து செயல்படுத்துவதன் மூலமும்,

உறுதியான நடவடிக்கைகள் மூலம் எல்லைப் பகுதிகளில் அமைதியையும் இயல்புநிலையையும் பராமரிப்பதன் மூலமும் இந்தியா சீனாவுடன் இணைந்து செயல்படும் என்று நம்பப்படுகிறது.”

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“மக்களுக்கு 'வெற்றி தீபாவளி' பரிசாக ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது"- இபிஎஸ்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் ஆவின் பால் பொருள்களின் ...

"கைதிகள் தப்பிய நேரத்திற்கும், போலீஸுக்குத் தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கும் அதிக இடைவெளி" – அன்புமணி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறைச்சாலை அமைந்துள்ளது. இதில்...

குடும்ப வன்முறை: அடிப்பது மட்டும்தான் வன்முறையா? சட்ட பாதுகாப்பும், உதவியும்! சட்டம் சொல்வது என்ன?-7

குடும்பம் என்றால் அன்பும் அரவணைப்பும் இருக்க வேண்டும். ஆனால், சில வீடுகளுக்குள்...

மகாராஷ்டிரா வறட்சி: 13000 பேர் தற்கொலை? தாலியை அடகு வைத்து கால்நடை தீவனம் வாங்கும் விவசாயிகள்

மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயிகள் விதைத்த...