7
May, 2026

A News 365Times Venture

7
Thursday
May, 2026

A News 365Times Venture

ஐநா: ஈரானுக்கு எதிராக வாக்களித்த இந்தியா; வெளிநடப்பு செய்த ரஷ்யா, சீனா! – என்ன நடந்தது!

Date:

அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடங்கி இன்று 13 நாள்கள் ஆகிவிட்டது. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. பிப்ரவரி 28 முதல் ஆறு Gulf Cooperation Council (ஜிசிசி) நாடுகள் மீதும் ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. ஈரான் வரலாற்றில் முதன் முறையாக முழு வளைகுடா பிராந்தியத்தையும் நேரடியாக குறிவைப்பது இதுவே முதல் முறை.

இந்தியா – இஸ்ரேல் உறவு

இந்த தாக்குதலின்போது விமான நிலையங்கள், அமெரிக்காவின் இராணுவ தளங்கள், எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், துறைமுகங்கள் என அமெரிக்காவுக்கு உதவிகள் செல்லும் அனைத்துத் வாய்ப்புகளையும் குறிவைத்தது. இந்த தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 122 பேர் காயமடைந்தனர். குவைத்தில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் அலி அல் சேலம், கேம்ப் புஹ்ரிங் தளங்கள், குவைத் சர்வதேச விமான நிலையம் மற்றும் அமெரிக்க தூதரகம் ஆகியவை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் ஆறு அமெரிக்க வீரர்கள் மற்றும் இரண்டு காவலர்கள் கொல்லப்பட்டனர். மூன்று F-15 போர் விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன. இதனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நீடிக்கிறது. இந்த நிலையில், வளைகுடா நாடுகள் மற்றும் ஜோர்டானுக்கு எதிரான ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஒரு தீர்மானம் கொண்டுவந்தது. அந்த தீர்மானத்தில், “ஈரானின் அனைத்து தாக்குதல்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தி அச்சுறுத்தல்களைக் கைவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

அமெரிக்கா - சீனா
அமெரிக்கா – சீனா

தற்போது அமெரிக்காவின் தலைமையில் உள்ள 15 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் புதன்கிழமை இந்தத் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது. இந்த தீர்மானத்தை ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பங்களாதேஷ், பூட்டான், கனடா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, ஜப்பான், குவைத், மலேசியா, மாலத்தீவுகள், மியான்மர், நியூசிலாந்து, நோர்வே, ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, சிங்கப்பூர், ஸ்பெயின், உக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஏமன், சாம்பியா இந்தியா உள்ளிட்ட 130 க்கும் மேற்பட்ட நாடுகளுடன் இணைந்து ஈரானுக்கு எதிராக வாக்களித்திருக்கிறது. அதே நேரத்தில் ஐ.நா-வின் நிரந்தர உறுப்பினர்களான சீனாவும் ரஷ்யாவும் வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தன.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

TVK: "NDA கூட்டணிக் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பும் எண்ணம் இல்லை" – சி.டி.ஆர். நிர்மல் குமார்

திமுக, அதிமுகவை விட, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக...

`இரண்டு பி.எல்.ஓக்கள் காணாமப் போனாங்க!' – மம்தா தொகுதியான பவானிப்பூர் எஸ்.ஐ.ஆர் அதிகாரி சி.முருகன்

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை...

'கடந்த காலங்களை போலவே, பாஜக ஆளுநர்களை வைத்து இடையூறு!' – செல்வப்பெருந்தகை

தவெக ஆட்சி அமைப்பதில் இழுப்பறி நீடித்து வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ்...

`அந்த திட்டம் வேண்டாம்!' – அதிமுகவுக்கு `நோ' சொல்லிய திமுக?

தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்தாலும் இன்னும் பரபரப்புக்குக் குறைவில்லாமல் நகர்கிறது அரசியல்...