22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

’என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா’ –அமைச்சர் கீர்த்தனாவின் ஆபரேசன் குறித்து கனிமொழி

Date:

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு பெண்ணாகவும், ஒரு சகோதரியாகவும் இதை நேரில் பார்த்ததால் சொல்கிறேன். என் அன்பு தங்கை அமைச்சர் கீர்த்தனா அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் 20 நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்திய நிலையிலும், 4 நாட்களிலேயே மீண்டும் மக்கள் பணிக்குத் திரும்பினார்.

மருத்துவமனை படுக்கையில் இருந்தபோதும், முதலமைச்சரின் லண்டன் பயணத்திற்கான ஏற்பாடுகள் சரியாக நடைபெறுகிறதா என்பதில்தான் அவரது கவனம் இருந்தது. ஆனால், அவர் சில நாட்கள் பணிக்கு வராததைப் பற்றி பேசும்போது, அவரது உடல்நிலை, காயம் குறித்து சிந்திக்காமல் அதை மாதவிடாயுடன் தொடர்புபடுத்தும் பிற்போக்குத்தனமான சிந்தனை வேதனை அளிக்கிறது.

கனிமொழி சந்தோஷ்

பெண்கள் அவர்களின் உடல் சுழற்சியால் மட்டும் வரையறுக்கப்படுபவர்கள் அல்ல. நாங்கள் தலைவர்கள், தொழில் வல்லுநர்கள், தாய்கள், மகள்கள். வலி, நோய், காயம் என அனைத்தையும் கடந்து கடமையைத் தொடர்ந்து செய்பவர்கள்.

ஒரு பெண்ணின் பணியை விமர்சிக்க முடியாதபோது, அவரது உடலைப் பற்றி பேசுவது அரசியல் விமர்சனம் அல்ல; அது பிற்போக்குத்தனமான மனநிலையின் வெளிப்பாடு. பெண்களை அவர்களின் சாதனைகளுக்காக மதிப்போம். அவர்களின் உடலை அரசியல் கேலிக்குரிய பொருளாக மாற்றுவதை நிறுத்துவோம்.

பெண்கள் இதைவிட சிறந்த மரியாதைக்கு உரியவர்கள். தமிழ்நாடும் இதைவிட சிறந்த அரசியல் பண்பாட்டுக்கு உரியது. என்னை மன்னித்துவிடுங்கள் கீர்த்தனா. இதை ரகசியமாக வைத்திருக்கவே நீங்கள் விரும்பினீர்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால், உங்கள் அர்ப்பணிப்பை பார்த்த ஒரு சகோதரியாக  இதை சொல்ல வேண்டிய கடமை எனக்கு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

கச்சா எண்ணெய் விலை உயர்வு: "நாங்கள் காரணமா? Hitler Strategy இது" – அமெரிக்காவைச் சாடும் ஈரான்

தற்போது உலக அளவில் எகிறியிருக்கும் கச்சா எண்ணெய்யின் விலைக்கும், பல நாடுகளில்...

”நம்ம கட்சி திமுக கூடாரமா மாறிட்டு வருது தலைவரே…” – விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி

தூத்துக்குடி மாவட்ட த.வெ.கவில், புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் மதன் ராஜாவும்,...

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி...