11
August, 2026

A News 365Times Venture

11
Tuesday
August, 2026

A News 365Times Venture

"எங்களுக்கு அப்படியொரு பயம், முதல்வர் தினம் தினம்..!"- எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்துக்கு ஆனந்த் பதில்

Date:

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

கடந்த வாரம் நடைபெற்ற விவாதத் தொடரில், ” முழு பயிர் கடன் தள்ளுபடி என வாக்குறுதி அளித்தீர்களே அது என்ன ஆனது?” என்று உதயநிதி கேள்வி எழுப்பி இருந்தார்.

முதல்வர் விஜய்

அதற்கு பதில் அளித்த முதல்வர் விஜய், ” ‘அரசியலே நாங்கதான்’ என சொல்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்திருந்தாலே விஷயம் தெரிந்திருக்கும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இன்றைய விவாதத்தில் பேசிய திமுக எம்எல்ஏ எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், ” திமுக பேசிப் பேசி வளர்ந்த இயக்கம். எங்களை பார்த்து பேப்பர் படிக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்…நாங்கள் ஆட்சியில் இருந்த போது காலை 8 மணி வரைக்கும் அவ்வளவு டென்ஷனாக இருக்கும்.

பேப்பரில் மக்கள் பிரச்னைகளைப் பார்த்துவிட்டு அதிகாரிகள் மூலம் முதல்வர் எங்களைத் தொடர்புகொண்டு என்னவென்று கேட்பார். அதனால் 5 ஆண்டுகளும் டென்ஷனாகவே இருந்தோம். ஆனால், நீங்களெல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்களே?” என்று தவெகவை சாடினார்.

எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எழுந்து பேசிய அமைச்சர் ஆனந்த், ” சின்ன வாய்க்கால் பிரச்னை என்றாலும் அது சரியாகிவிட்டதா? என உடனே போன் போட்டு கேட்கக் கூடிய முதல்வர் இவர். உங்களுக்காகவாது 5 ஆண்டுகள்தான் டென்ஷன். எனக்கு தினந்தினம் டென்ஷன். சின்ன விஷயமாக இருந்தாலும் எங்களுக்கு அப்படி ஒரு பயம் இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“தமிழ் மீதான தவறான விமர்சனத்திற்கு மன்னிப்பு கோர வேண்டும்" – அமைச்சர் மரிய வில்சனைச் சாடும் பாஜக

நேற்று நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய நிதித்துறை அமைச்சர் மரிவில்சன், ''நான்...

`அந்த தாக்குதலில் நான் உயிரிழந்திருப்பேன்' – கல், ஷூ, சகதியால் மம்தா பானர்ஜி கார் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அங்கு பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது....

`இளம் வயதினருக்கு வாய்ப்பு கொடுங்கள்' – திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மன்னார்குடி நிர்வாகி கோரிக்கை

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு `வெல்வோம் இருநூறு படைப்போம் வரலாறு' என்ற முழக்கத்தை...

ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!

ஈரான் விஷயத்திலும் சரி... காசா விஷயத்திலும் சரி... அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு...