10
August, 2026

A News 365Times Venture

10
Monday
August, 2026

A News 365Times Venture

பாடகர் வேலுமுருகனுக்கு `அறங்காவலர் தேர்வு குழுவில் பொறுப்பு' – தவெக அரசு அறிவிப்பு!

Date:

தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாமாண்டு தொடக்க விழாவில் முருகனாக விஜய்யைப் புகழ்ந்து பாடிய பாடகர் வேல்முருகனுக்கு, தவெக அரசு கௌரவம் அளித்துள்ளது.

பத்து லட்சத்துக்கு அதிகமாக வருமானம் வரும் கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யும் குழுவில் ஒரு உறுப்பினராக அவரை நியமித்துள்ளது தவெக அரசு.

தமிழ்நாடு முழுக்க இந்து அறநிலையத்துறையின் கீழ் வரும் கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சில தினங்களுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.

விஐபிக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் பலரும் இந்தப் பதவிக்கு முட்டி மோதிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் அறங்காவலர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஒரு குழுவை நியமித்து இன்று உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

விஜய் மேடையில் வேல்முருகன்

சினிமா தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஆன்மிக பேச்சாளர் சுமதிஸ்ரி உள்ளிட்டோர் அடங்கிய அந்தக் குழுவில் பாடகர் வேல்முருகனும் இடம்பெற்றுள்ளார்.

இது குறித்து அவரிடமே பேசினோம்.

”எளியவனான எனக்கு அரசாங்கத்துல அதுவும் அறநிலையத்துறையில் கிடைச்சிருக்கிற இந்தப் பொறுப்புங்கிறது பெரிய அங்கீகாரம். தமிழக வெற்றிக் கழக அரசுக்கு அதுக்காக என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிச்சுக்கிடுறேன். அந்த வேலைக்கு நேர்மையா என்ன செய்யணுமோ அதை நிச்சயம் செய்வேன்”’ என்கிறார் அவர்.

தவெக மேடையில் விஜய்யை முருக கடவுளாகப் பாவித்து இவர் பாடியதாக அப்போது சிலர் போலீஸில் புகார் அளித்தது நினைவிருக்கலாம்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான், காசா போர்: ட்ரம்பிற்கு தலைவலியாக மாறும் நெதன்யாகு; பாதிக்கும் ட்ரம்பின் இமேஜ்!

ஈரான் விஷயத்திலும் சரி... காசா விஷயத்திலும் சரி... அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு...

தமிழ்த்தாய் வாழ்த்து: “பாஜக என்றாலே இந்த அரசு பயப்படுகிறது" – முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம்

சட்டமன்றத்துக்கு வெளியே முன்னாள் அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய...

Mule Accounts: ₹545 கோடி சைபர் மோசடி; 837 பேரை கைதுசெய்த தமிழ்நாடு போலீஸின் ஆபரேஷன்! என்ன, எப்படி?

சைபர் குற்றங்களுக்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள் தான் போலி வங்கிக் கணக்குகள்...

"நான் பைபிள் படித்திருக்கிறேன்; இப்படித்தான் பேசுவேன்!"- எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு மரிய வில்சன் பதில்

பட்டஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று (ஆகஸ்ட்.10) சட்டமன்றத்தில்...