21
September, 2026

A News 365Times Venture

21
Monday
September, 2026

A News 365Times Venture

"ஊர்ந்து எனச் சொன்னால் உறுத்துகிறதா? தவழ்ந்து என மாற்றுங்கள்" – அதிமுகவின் அமளிக்கு ஸ்டாலின் பதில்

Date:

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று (ஏப்ரல் 29) காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை தொடர்பான கேள்வி – பதில் விவாதங்கள் நடைபெற்றன.

அப்போது சட்டம் ஒழுங்கை சரியில்லை என்று திமுக ஆட்சியை விமர்சித்துப் பேசிய அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், “அரசு தலை நிமிர்ந்து இருக்கிறதா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்” என்று பேசியிருந்தார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின், “கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஊர்ந்துதான் சென்றது” என்று பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார்.

சட்டப்பேரவையில் ஸ்டாலின்

‘ஊர்ந்து’ என்ற வார்த்தையால் கோபமடைந்த அதிமுக-வினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு அந்த வார்த்தையை நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.

இது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் எழுந்து, “ஊர்ந்து, தவழ்ந்து என்று நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அது ஒன்றும் அன்-பார்லிமென்ட் வார்த்தை அல்ல. 

அது உங்களுக்கு உறுத்தியிருந்தால், எதையோ குறிப்பிடுவதாக நீங்கள் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிடலாம். சபாநாயகர் அவர்களே ‘ஊர்ந்து’ என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ‘தவழ்ந்து’ என்று போட்டுக்கொள்ளுங்கள்” என்று நையாண்டியாகப் பதிலளித்தார்.

சட்டம் ஒழுங்கு குறித்த விவாதம், இப்படியான பதிலடிகளால் மடைமாறி சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'உட்கார கூட இடமில்ல…' – முதல்வர் விஜய் ஆய்வு செய்த எழும்பூர் மருத்துவமனையின் அவலநிலை என்ன?

சென்னை எழும்பூரில் உள்ள பழமையான மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய் சமீபத்தில்...

"முதல்வர் தனது வேலையைப் பார்க்கத்தான் தலைமைச் செயலகம்; கடலைப் பார்ப்பதற்கல்ல"- ஸ்டாலின் சாடல்

நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி...

ஹார்முஸில் தொடங்கிய பிரச்னை: France-ல் பெட்ரோல், டீசல் கடும் தட்டுப்பாடு; இந்தியாவுக்கும் சிக்கல்?

ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் உலக நாடுகளைக் கடுமையாகப் பாதித்து வருகிறது.ஹார்முஸ் நீர்ச்சந்தி...

தாராபுரம்: தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மக்கள், பாதியில் நிறுத்தப்பட்ட தேர்தல் பிரசாரம்!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர்...