24
September, 2026

A News 365Times Venture

24
Thursday
September, 2026

A News 365Times Venture

“ஆதவ் அர்ஜுனா தான் சீட் வாங்கி கொடுத்தார்..!" – சட்டமன்றத்தில் ரகசியத்தை உடைத்த திமுக எம்.எல்.ஏ

Date:

“அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருக்கும்போது அவர்தான் எனக்குச் சீட் வாங்கிக் கொடுத்தார்” என்று திமுக எம்.எல்.ஏ ரிஷிவந்தியம் கார்த்திகேயன் கூறியது, அவை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் பெயரைக் குறிப்பிட்டு, “நானும் அவரும் நண்பர்கள்” எனப் பேசினார். அப்போது குறுக்கிட்ட துணைச் சபாநாயகர் ரவிசங்கர், பெயரைக் குறிப்பிடாமல் ‘அமைச்சர்’ என்று மட்டும் குறிப்பிட்டுப் பேசுமாறு அறிவுறுத்தினார்.

ஆதவ் அர்ஜுனா

அப்போது பேசிய திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன், “எங்களுக்கு இடையிலான நட்பைப் பேரவைத்தலைவர் பிரிக்க வேண்டாம். ஆதவ் அர்ஜுனா திமுகவில் இருந்தபோது என்னை அழைத்துச் சென்று கட்சித் தலைமையிடம், அவரின் சொந்தக்காரர் என்று அறிமுகப்படுத்தி, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார்” எனப் பேசியது, அவை முழுவதும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

அப்போது பேசிய நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், “அமைதியாக அமர்ந்திருக்கும் பொதுப்பணித்துறை அமைச்சரை எதற்காகக் கோத்துவிடுகிறீர்கள்” எனக் கேட்டது, மேலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி...

தேர்தல் ஆணையம்: “இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" – முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி...

“ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" – அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி,...

`குடியுரிமைச் சட்டத்தின் பின்வாசல் வழி… தேர்தல் ஆணையத்தின் சரிவு.!' | எம்.ஜி.தேவசகாயம் EXCLUSIVE

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட...