29
August, 2026

A News 365Times Venture

29
Saturday
August, 2026

A News 365Times Venture

“அடுத்தப் பிரதமர் யார்?" – கருத்து கணிப்பில் 3-வது இடம்; மம்தா-வை பின்னுக்கு தள்ளிய முதல்வர் விஜய்!

Date:

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய், அண்மையில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சர்ப்ரைஸ் வெற்றி பெற்று தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே, இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கான ரேஸில் விஜய் 3-வது இடத்தைப் பிடித்து தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

விஜய்

‘இந்தியா டுடே – சி வோட்டர்’ இணைந்து நடத்திய சமீபத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ (MOTN) கருத்துக்கணிப்பில், 2029 மக்களவைத் தேர்தலில் நாட்டின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்ற கேள்விக்கு மக்கள் அளித்துள்ள வாக்குகள் வெளியாகி உள்ளன. இதில் 2024-ல் தீவிர அரசியலில் களமிறங்கிய த.வெ.க தலைவர் விஜய்க்கு 9.2% வாக்குகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி (48.7%), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி (27.1%) ஆகியோருக்கு அடுத்தபடியாக நாட்டின் 3-வது பிரபல பிரதமர் வேட்பாளராக விஜய் உருவெடுத்துள்ளார்.

இந்தக் கருத்துக் கணிப்புப் பட்டியலில் திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி 2% வாக்குகளுடனும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் 1.7% வாக்குகளுடனும் விஜய்க்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். மேலும், ‘காஃக்ரோச் ஜனதா கட்சி’ (CJP) மூலம் புகழ்பெற்ற வளர்ந்து வரும் இளம் தலைவர் அபிஜீத் திப்கே 1.3% வாக்குகளைப் பெற்று பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜரிவால் 1.2% வாக்குகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சட்டமன்றம்: “முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, `` முதல்வர் விஜய்...

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! – காரணம் என்ன?

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால்...

'நானே மாடுபிடி வீரர்தான்…!' – சட்டமன்ற ஜல்லிக்கட்டு பேச்சு பற்றி எம்.எல்.ஏ கருப்பையா!

'இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு' என தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டமன்றத்தில்...

H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்… ட்ரம்ப் அரசின் முடிவால் பிரச்னை!

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றமற்ற விசாக்களில் (Non-immigrant visas) பணிபுரிபவர்கள், வேலை...