29
August, 2026

A News 365Times Venture

29
Saturday
August, 2026

A News 365Times Venture

சட்டமன்றம்: “முதல்வர் உங்களிடம் என்ன பேசினார்?" – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

Date:

அமைச்சர் செங்கோட்டையன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ முதல்வர் விஜய் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்வது, மெட்ரோ ரயில் பயணம், புழல் சிறைக்குச் சென்று அங்கே பார்வையிடுவது போன்ற பல்வேறு பணிகளை வரலாற்றில் இல்லாத அளவிற்கு சென்று நேரடியாக பார்த்து ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவருடைய உள்ளத்திலே இருப்பது ஒன்றே ஒன்றுதான். தமிழ்நாட்டு மக்களுக்குச் சிறந்த ஆட்சியை தந்து தமிழகம் மேலும் இந்தியாவிற்கே வழிகாட்டியாக உருவாக வேண்டும் என்பதுதான். நேபாளத்தில் நடந்தவை உலகத்தையே உலுக்கியிருக்கிறது. முதல்வர் இது தொடர்பான தகவல்களை கவனித்துக்கொண்டே இருக்கிறார்.

முதல்வர் விஜய்

டெல்லிக்கு நான்கு அமைச்சரை அனுப்பி, இந்திய அரசோடு இணைந்து என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து மீட்புப் பணிகளுக்கு உதவி வருகிறார். முதல்வர் என்னிடம் அமர்ந்து என்ன பேசினார் என்பதை வெளியே சொல்வது முறையாக இருக்காது. இடம் மாறி உட்கார்ந்த அவர், எல்லோரையும் உற்சாகப்படுத்த விரும்புகிறார்.

சட்டமன்ற விவாதம் குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு நான் பதில் சொன்னால், அது விவாதமாகிவிடும். அது தேவையற்ற ஒன்று. சி ஓட்டர்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் அடுத்தப் பிரதமர் என்ற பட்டியலில், மோடி முதல் இடத்தையும், விஜய் மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறார்கள். ஆனால், புதிதாக உருவான ஒரு கட்சியின் தலைவர், இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் எந்த வரலாற்றிலும் இல்லை. எனவே, எதுவும் நடக்கலாம். இந்தியா முழுவதும் விஜய் போய் சேருவதற்கு காரணம் அவரின் திட்டங்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.” என்றார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

“அடுத்தப் பிரதமர் யார்?" – கருத்து கணிப்பில் 3-வது இடம்; மம்தா-வை பின்னுக்கு தள்ளிய முதல்வர் விஜய்!

நடிகராக இருந்து அரசியல் தலைவராக உருவெடுத்த த.வெ.க தலைவர் சி.ஜோசப் விஜய்,...

சர்வதேச உதவிகளை மறுத்த நேபாள அரசு: அழுத்தத்துக்குப் பிறகு முடிவில் மாற்றம்! – காரணம் என்ன?

நேபாள நாட்டின் போடேகோசி மற்றும் திரிசூலி ஆறுகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால்...

'நானே மாடுபிடி வீரர்தான்…!' – சட்டமன்ற ஜல்லிக்கட்டு பேச்சு பற்றி எம்.எல்.ஏ கருப்பையா!

'இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு' என தவெக எம்.எல்.ஏ கருப்பையா சட்டமன்றத்தில்...

H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்… ட்ரம்ப் அரசின் முடிவால் பிரச்னை!

அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான குடியேற்றமற்ற விசாக்களில் (Non-immigrant visas) பணிபுரிபவர்கள், வேலை...