சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது முதல்வர் விஜய், திமுகவைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
சர்க்காரியா கமிஷன், மிசா குறித்தெல்லாம் பேசியிருந்தார். குறிப்பாக மிசா குறித்து பேசும்போது ஸ்டாலினை மறைமுகமாகச் சைகை ஒன்றின் மூலம் சாடியிருந்தார்.
இதற்கு எதிர்ப்புகள் கிளம்ப முதல்வர் விஜய், “பதிலுரையின் இடையேயான எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும் உள்நோக்கம் கொண்டதில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று விளக்கம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வரின் சட்டமன்றப் பதிலுரைக் குறித்து வீடியோ ஒன்றைப் பேசி வெளியிட்டிருக்கிறார். அதில், “அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத்தில் நடந்த சில சர்ச்சைகள் தமிழ் மக்களுக்கும் நம் உடன் பிறப்புகளுக்கும் கோபத்தையும், அதிருப்தியையும் உண்டாக்கி இருப்பதைப் நான் உணர்கிறேன்.
இந்தச் சர்ச்சையில் குறிப்பாக சிறை வரலாறும் இருப்பதால் அதைப் பற்றி நான் கொஞ்சம் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். தம்பி விஜய் நீங்கள் சொல்வது உண்மைதான். பொய்யெல்லாம் இல்லை.
எமெர்ஜென்சி காலத்தில் அதை எதிர்த்து கலைஞர் மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டி மிசா சட்டத்தைக் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து அப்போது இருந்த ஒன்றிய அரசாங்கம் 1971-ம் ஆண்டு திமுக ஆட்சியைக் கலைத்தார்கள்.
ஆட்சியைக் கலைத்த அடுத்த நொடி மிசா சட்டத்தில் என்னைக் கைது செய்வதற்காக வீட்டிற்கு போலீஸ் வந்தார்கள். அன்று நான் வீட்டில் இல்லை. ‘மகன் பிரசாரத்திற்குச் சென்றிருக்கிறார் வந்ததும் நானே அனுப்பி விடுகிறேன்’ என்று கலைஞர் சொல்லி அனுப்பிவிட்டார்.

அடுத்த நாள் நான் வீட்டிற்குச் சென்றதும் அவரே போலீஸை வரச்சொல்லி கைது செய்ய சொல்லிவிட்டார். சிறையில் எனக்கு பல கொடுமைகள் நடந்தன…” என்று சில விஷயங்களை ஸ்டாலின் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். முழு வீடியோ கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.
வீட்ல என்னை meet பண்ணப்ப சொன்னதை மறந்துட்டீங்களா தம்பி விஜய்? pic.twitter.com/kzpwXi14L8
— M.K.Stalin (@mkstalin) September 10, 2026




