5
September, 2026

A News 365Times Venture

5
Saturday
September, 2026

A News 365Times Venture

Vijay: “`கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்'னு சொன்னேன்!" – முதல்வர் சர்ப்ரைஸ் விசிட்; மூதாட்டி நெகிழ்ச்சி

Date:

ஒவ்வோர் ஆண்டும் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவது வழக்கம்.

ஆனால் தமிழ்நாட்டிற்கான காவிரி நீரை கர்நாடகா அரசு திறந்துவிட மறுத்ததால் மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லை.

இதனால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை ஆணையம், உச்ச நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவிட்ட நிலையிலும் கர்நாடகாவில் கனமழை பெய்ததாலும் காவிரி நீர் கொஞ்சம் திறந்துவிடப்பட்டது.

மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர்

இதனையடுத்து மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது. தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டிய நிலையில் காவிரி டெல்டாவில் சம்பா சாகுபடிக்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.

பாரம்பர்ய உடையில் சென்ற முதல்வர் விஜய்க்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.

அணையை திறந்து வைத்த முதல்வர் விஜய், புது வெள்ளத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தார். இதனைத் தொடர்ந்து மேட்டூர் அருகே உள்ள விவசாயி வீட்டிற்கு திடீரென சென்று முதல்வர் விஜய் பார்வையிட்டார்.

தங்களது வீட்டிற்கு வந்த முதலமைச்சர் விஜய்யின் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற மூதாட்டி செல்லத்துக்கு, விஜய் கூலிங் கிளாஸ் அணிவித்தார்.

சர்பரைஸ் விசிட் அடித்த முதல்வர்
சர்ப்ரைஸ் விசிட் அடித்த முதல்வர்

விஜய் சந்தித்தது குறித்துப் பேசிய மூதாட்டி செல்லம், “கண்ணு உன்ன ரொம்ப பிடிக்கும்’னு சொன்னேன். அவர் வந்தது ஆச்சர்யமாக இருந்துச்சு. பேச வார்த்தையே இல்ல” எனக் கூறி, நெகிழ்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

சட்டசபை நிகழ்ச்சிகளைப் பதிவு செய்ய கண்ணாடியில் AI கேமராவா? – அமைச்சர் முகமது பர்வேஸ் விளக்கம்

தமிழ்நாட்டு அமைச்சரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும்,...

'வெடி சத்தம் மட்டுமே; புகையும் இல்லை; தீயும் இல்லை' – ஈரானின் Kharg தீவை மீண்டும் தாக்கிய அமெரிக்கா?

ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சொல்லி...

KN நேரு வீட்டில் சோதனை: "நேருவைப் பழிவாங்க பார்க்கிறார்கள்; பணிந்து போகாது திமுக" – கனிமொழி

முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ-வுமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் வீட்டில் இன்று...

Trump: "ஹார்முஸ் நீர்ச்சந்திக்குப் பதிலாக சிரியா" – ட்ரம்ப் சொல்லும் ‘புதிய வழி’ என்ன?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகிவிட்டன.இந்தப் போரில் அமெரிக்காவிற்கும்,...