11
June, 2026

A News 365Times Venture

11
Thursday
June, 2026

A News 365Times Venture

Vijay: "கஜானாவைத் துடைத்து வைத்திருக்கிறார்கள்" – விஜய் சொன்ன 'வெள்ளை அறிக்கை' என்றால் என்ன?

Date:

தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்ற கையோடு, அதே மேடையில் முதல் மூன்று கையெழுத்துகளைப் போட்டார் தவெக தலைவர் விஜய். அடுத்து, மக்களுக்கு சின்ன ‘ஸ்பீச்’சும் கொடுத்தார். இது இரண்டுமே தமிழ்நாடு அரசியலில் புதுகாட்சிகள்.

அந்தப் பேச்சில் விஜய் குறிப்பிட்ட முக்கியமான ஒன்று, “ரூ.10 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். கஜானாவைத் துடைத்து வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.

தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் இந்த அரசு நம் கைகளுக்கு வந்திருக்கிறது.

எது எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டு ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என விரும்புகிறேன்” என்பதுதான்.

தமிழ்நாடு

இந்தப் பேச்சில் வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்கிற கேள்வி பலருக்கு எட்டி பார்த்திருக்கும். அந்தக் கேள்விக்கான பதில்தான் இதோ…

குறிப்பிட்ட ஒரு விவகாரத்தைப் பற்றி முழுவதுமாக ஆய்வு செய்து, அதன் வெளிப்படையான அறிக்கை அரசாங்கம் வெளியிடுவதே ‘வெள்ளை அறிக்கை’.

இந்தியாவில் நடந்த 200 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியால், இன்னும் பல பிரிட்டிஷ் நடைமுறைகள் இந்தியாவில் இருந்து வருகின்றன. அதில் ஒன்று தான் இதுவும்.

பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைப்படி, முக்கியமான பிரச்னைகளுக்கு வெள்ளை அறிக்கை தயார் செய்வது வழக்கம்.

நெருக்கடி நிலையை மக்களுக்கும், பிற கட்சிகளுக்கும் எடுத்துக்காட்ட பொதுவாக வெள்ளை அறிக்கை பயன்படுத்தப்படும்.

விஜய் வெளியிடும் வெள்ளை அறிக்கை என்பது ‘நிதி அடிப்படையிலானது’ என்று புரிந்துகொள்ளப்படுகிறது.

கடன்
கடன்

அதனால், அந்த அறிக்கையில் தமிழ்நாட்டில் நிதி நிலைமை எப்படி இருக்கிறது, எவ்வளவு கடன் இருக்கிறது, இன்னும் எத்தனை கடன் வாங்க முடியும், வருமானத்தை எப்படி பெருக்கலாம் போன்றவை இடம்பெற்றிருக்கும்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக ஆட்சியமைத்த போதும், அப்போதைய தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கை வெளியிட்டிருந்தார் குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'பிரசவ டாக்டர் இல்லை; தாயின் வயிற்றிலேயே உயிரிழந்த கண்ணகி நகர் குழந்தை!' – உலுக்கும் Spot Report!

`எங்க குழந்தை இந்த உலகத்தை பார்க்குறதுக்கு முன்னாடியே கொன்னுட்டாங்களே....ஏழைங்க உசுருன்னா இவங்களுக்கு...

விழுப்புரம்: மீனவப் பெண்கள் தூக்கு மாட்டும் போராட்டம்; போலிசாருடன் மோதல் | Photo Album

“கடல் பசுவுக்காக மீனவர் வாழ்வாதாரத்தை சிதைக்கலாமா?” - கொதிக்கும் மீனவர்கள்! Source...