1
July, 2025

A News 365Times Venture

1
Tuesday
July, 2025

A News 365Times Venture

Vedan: "எங்க 35 வருட அரசியலை 2 நிமிடத்துல சொல்லிடுறீங்க" – வேடனுடன் வீடியோ காலில் பேசிய திருமா

Date:

விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் ராப் பாடகரான வேடனிடம் வீடியோக்காலில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோக்காலில் பேசிய திருமாவளவன், “நான் கேரளாவிற்கு அடிக்கடி வருவேன்” என்று கூற, “அடுத்தமுறை கேரளாவிற்கு வரும்போது கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள் ஐயா” என்று வேடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

தொல்.திருமாவளவன் எம்.பி

“வரும் 14 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிகப்பெரிய ஒரு பேரணியை நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். உங்களால் வர முடியுமா? நீங்கள் வந்தால் தம்பிகள் எல்லோருக்கும் உற்சாகமாக இருக்கும்” என்று திருமாவளவன் கேட்க, “நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பைப் பார்த்து விட்டு வர முடியுமா என்று சொல்கிறேன் ஐயா” என்றிருக்கிறார்.

தொடர்ந்து, “உங்கள் பாடல்கள் எல்லாம் புரட்சிகரமாக இருக்கின்றன. நீங்கள் சொல்லுகின்ற கருத்துக்கள் எல்லாம் புரட்சிகரமாக நன்றாக இருக்கின்றன.

மலையாள ராப் பாடகர் வேடன்
மலையாள ராப் பாடகர் வேடன்

நாங்கள் 35 வருடங்களாக அரசியலில் பேசி வரும் விஷயங்களை 2 நிமிட பாடல்களில் சொல்லிவிடுகிறீர்கள். தைரியமாக இருங்கள். நாங்கள் எல்லோரும் இருக்கிறோம். உங்களைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சி” என்று வேடனிடம் பேசி இருக்கிறார் திருமாவளவன்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...