20
April, 2025

A News 365Times Venture

20
Sunday
April, 2025

A News 365Times Venture

US: கை, கால்களில் விலங்கிடும் அமெரிக்கா… வெள்ளை மாளிகை வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

Date:

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் முக்கியமானது, அமெரிக்காவில் சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றும் அறிவிப்பு. மெக்சிகோ, இந்தியா, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மக்கள், கை, கால்களில் விலங்கிடப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். இதில், கொலம்பிய அரசு கொலம்பியர்களை கைவிலங்கிட்டு அனுப்பும் இராணுவ விமானத்தை கொலம்பியாவில் தரை இறங்குவதற்கான அனுமதியை மறுத்தது. மேலும், “எங்கள் நாட்டு குடிமக்களை இப்படி தரம் தாழ்ந்த முறையில் குற்றவாளிகளை போல கையாள்வதை நாங்கள் விரும்பவில்லை ” – என அமெரிக்காவுக்கு செய்தி அனுப்பியது.

அதைத் தொடர்ந்து, கொலம்பியாவின் மீது அதிகமான வரிகளை விதிப்போம் என ட்ரம்ப் மிரட்டியும், தங்களின் சொந்த விமானப்படை விமானங்களை அமெரிக்காவுக்கு அனுப்பி, கண்ணியத்தோடு அவர்களை கொலம்பியாவுக்கு அழைத்து வந்தது. ஆனால், மூன்று முறை இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட இந்தியப் புலம்பெயர்ந்தவர்கள் மூன்றுமுறையும் கை, கால்கள் விலங்கிடப்பட்ட நிலையிலேயே அழைத்து வரப்பட்டிருக்கின்றனர். இது இந்தியர்களிடையே அதிர்ச்சியையும், ஆதங்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து திரும்பும் புலம்பெயர்ந்தவர்களுக்கு விமானநிலையத்தில் விலங்கிடப்படும் காட்சிகளை அமெரிக்க வெள்ளை மாளிகை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, “ASMR: Illegal Alien Deportation Fligh” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவத்தை `மனிதாபிமானமற்ற செயல்’ என்று பலரும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதிமுக: "மல்லை சத்யா மட்டும் தலைவர் வைகோவுக்கு சேனாதிபதி இல்லை" – வெடிக்கும் துரை வைகோ

ம.தி.மு.க முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக திருச்சி எம்.பி.,யும் வைகோவின் மகனுமான...

Stalin: "திமுக கூட்டணியில் பாமக இணைகிறதா?" – கூட்டணி குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியது என்ன?

தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆங்கில நாளிதழ் ஒன்றிற்குப் பேட்டி அளித்திருக்கிறார். அந்த பேட்டியில்,...

'அமித் ஷா போன மாநிலங்கள் எல்லாமே வெற்றிதான்; எல்லாம் அவர் பார்த்துப்பார்' – நயினார் நாகேந்திரன்

கோவை காளப்பட்டி தனியார் மண்டபத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு...

கோவையில் நயினார் நாகேந்திரனுக்கு வரவேற்பு; அண்ணாமலை மிஸ்ஸிங் டு மேடையில் வெளியான அறிவிப்பு!

பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு கோவை காளப்பட்டி...