7
May, 2026

A News 365Times Venture

7
Thursday
May, 2026

A News 365Times Venture

UPSC மாணவர்களுக்கு பாதிப்பா?: `அரசுத் திட்டங்களைச் சீர்குலைப்பவர்களுக்கு…' – TRB ராஜா

Date:

தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ உள்ளிட்ட பல்வேறு முன்னோடித் திட்டங்களில் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஆலோசகர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக எழுந்துள்ள தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து முன்னாள் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், சமூக வலைதளங்களிலும் இது குறித்த கவலைகள் வலுத்து வருகின்றன.

UPSC

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தன் எக்ஸ் பக்கத்தில், “நான் முதல்வன், ஸ்டார்ட்அப் டிஎன் (Startup TN) மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை (SPI) ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக வரும் செய்திகள் வேதனையளிக்கின்றன. இது UPSC தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களின் எதிர்காலத்தையும், இளைஞர்களின் புத்தொழில் முயற்சிகளையும் பாதிக்கும். திராவிட மாடல் திட்டங்களைச் சீர்குலைக்க நினைத்தால் மௌனமாக இருக்க மாட்டோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாகச் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டுள்ள கோரிக்கையில், ‘நான் முதல்வன்’ திட்டம் மட்டுமன்றி, தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களும் தற்போது பீதியில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக:

  • ஸ்டார்ட்அப் டிஎன் (Start-up TN)

  • கைடன்ஸ் தமிழ்நாடு (Guidance TN)

  • மாநிலத் திட்டக் குழு (State Planning Commission)

  • நான் முதல்வன் துறைகள் (Naan Mudhalvan Verticals)

  • ஐடிஎன்டி ஹப் (ITnT Hub)

‘நான் முதல்வன்’ திட்டம்
  • டிஎன் வி சேஃப் (TN We Safe)

  • செய்தி மக்கள் தொடர்புத் துறை (TNDIPR)

  • சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை (SPI)

  • விழுதுகள் (Vizhuthugal)

  • தாட்கோ (Tahdco)

மற்றும் இதர ஆலோசகர்கள் (Consultants) எனப் பல தரப்பினரும் இந்த பணிநீக்க அச்சுறுத்தலால் கலக்கத்தில் உள்ளனர்.

முதனிலைத் தேர்வு மே 24 அன்று நடைபெற உள்ளதால், இந்தக் கடைசி 15 நாட்கள் மிகவும் முக்கியமானவை. கல்வி வழிகாட்டுதலுக்கு மட்டுமல்லாமல், இறுதிக்கட்டத்தில் தேர்வர்களின் நம்பிக்கையை வளர்க்கவும், நிலையான வழிகாட்டி ஆதரவு மிகவும் அவசியம். எனவே, அரசு அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை முடக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related