13
July, 2025

A News 365Times Venture

13
Sunday
July, 2025

A News 365Times Venture

Ukraine vs America: “நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்..'' – உறுதியாக நிற்கும் ஜெலன்ஸ்கி!

Date:

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில், உக்ரைன் போர் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடங்கி பெரும் வாக்குவாதத்தில் முடிந்தது. மூன்று வருடப் போரில் அமெரிக்காவின் உதவிக்கு உக்ரைன் நன்றி தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அதனால், கனிமவள ஒப்பந்தம் நிறைவேற்றாமலே இந்த சந்திப்பு முடிவடைந்தது.

ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி

ட்ரம்ப், புதினின் குரலில் பேசுவதாக ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நிலையில் இரு நாட்டின் அதிபர்களுக்கு மத்தியில் நடந்த இந்த விவாதம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

இதற்கிடையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம், “நடந்து முடிந்த வாக்குவாதத்தில் நிறைவேறவிருந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படவே இல்லை. எங்கள் நேரத்தை வீணடித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

அதைத் தொடர்ந்து ஃபாக்ஸ் நியூஸ் சேனாலுக்கு பேட்டியளித்திருக்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, “இனியும் அமெரிக்காவுடனான உறவை சரி செய்ய முடியுமா என்றால் நிச்சயமாக முடியும்… ஏன் முடியாது? ட்ரம்புடனான உறவைக் காப்பாற்ற முடியும். அமெரிக்க-உக்ரைன் உறவு இரண்டுக்கும் மேற்பட்ட அதிபர்களைப் பற்றியது. ரஷ்யாவின் மிகப் பெரிய, ஆயுதமேந்திய இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில், உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி மிகவும் தேவை. அமெரிக்காவின் ஆதரவு இல்லாமல் அதை எதிர்கொள்வது கடினமாக இருக்கும்.

நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்.. நாங்கள் ஏதும் மோசமான காரியத்தைச் செய்தோமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒரு வருத்தம் மட்டும்தான். செய்தியாளர்கள் முன்னிலையில் இந்தக் கருத்து பரிமாற்றம் நடந்திருக்கக் கூடாது” என்றார்.

ஜெலன்ஸ்கி

இதற்கிடையில், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “தேவைப்படும் வரை ஆஸ்திரேலியா உக்ரைனுடன் நிற்கும். உக்ரைன் மக்கள் தங்கள் சொந்த தேசிய இறையாண்மைக்காக மட்டுமல்ல, சர்வதேச சட்ட ஆட்சிக்காகவும் போராடுகிறார்கள். நாங்கள் உக்ரைனுடன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நிற்போம், ஏனெனில் இது ஒரு ஜனநாயக தேசத்திற்கும் புடின் தலைமையிலான ஒரு சர்வாதிகார ஆட்சிக்கும் இடையிலான போராட்டம்.” என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...