சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன்.
இவருக்கும், அந்தத் தொகுதியின் தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதிக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது கடைசி வரை டஃப் போட்டி நிலவி வந்தது.
வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் தவெக வேட்பாளர் ஸ்ரீனிவாச சேதுபதி 83,375 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
பெரியகருப்பன் பெற்ற வாக்குகளோ 83,374. ஆக, ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் வெற்றியை நழுவ விட்டுள்ளார் பெரியகருப்பன்.
இந்த ஒரு வாக்கு வித்தியாசம் பெரியகருப்பனுக்கு மட்டும் தோல்வியை வழங்கவில்லை.
இந்த வித்தியாசத்தால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர் ஆகிய நான்கு தொகுதிகளுமே தவெக வசம் சென்றுள்ளன.




