6
October, 2026

A News 365Times Venture

6
Tuesday
October, 2026

A News 365Times Venture

TVK: 'நம் சமூகத்தில் சமத்துவம் நிலைத்திட உறுதி ஏற்போம்'-அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய விஜய்

Date:

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு தவெக தலைவர் விஜய் மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ” நமது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135ஆவது பிறந்த நாளையொட்டி, சென்னை, பாலவாக்கத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

TVK Vijay

சட்ட உரிமைகள் மட்டுமில்லை, சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையும் அனைவருக்குமானவை என்பதை வலியுறுத்தி, தமது வாழ்நாளை மக்களுக்கு அர்ப்பணித்த அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குவோம். நம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கி, சமத்துவம் என்றும் நிலைத்திட உறுதி ஏற்போம்” என பதிவிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

By Election: 320 பூத்கள், 3,500 போலீஸார்; தாராபுரத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்...

மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! – இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கலையரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர்...

புதுச்சேரி: "4 விஸ்கி பாட்டில் வேணும்!" – மரம் ஏறி, தீயணைப்பு வீரர்கள் மீது சிறுநீர் கழித்த இளைஞர்

புதுச்சேரி சுப்பையா சாலையில் இருக்கிறது தீயணைப்புத் துறையின் தலைமை அலுவலகம். கடற்கரைக்கு...

"தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" – திமுக எம்.பி. கனிமொழி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்.6) நடைபெற இருக்கிறது....