18
November, 2026

A News 365Times Venture

18
Wednesday
November, 2026

A News 365Times Venture

வாணியம்பாடி: மகளின் கல்விக்காகத் தீக்குளிக்க முயன்ற தாய்; முழுக் கட்டணத்தையும் ஏற்ற திமுக நிர்வாகி

Date:

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகேயுள்ள கதிரிபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சக்திவேல் – கோமதி தம்பதியினர். இவர்களது மகள் பிரேமலதா தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.

தந்தை சக்திவேலுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரால் வேலைக்குச் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் வருமானம் இன்றி, மாணவியின் கல்லூரிக் கட்டணத்தைச் செலுத்த முடியாமல் பெற்றோர் தவித்து வந்தனர்.

வங்கிகளில் கல்விக்கடன் கிடைக்காததால், மாணவியின் படிப்பு பாதியிலேயே தடைப்படும் நிலையும் ஏற்பட்டது. கல்விக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் உரியத் தீர்வு கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற மக்கள் குறைதீர்வுக் கூட்டத்தில் மீண்டும் மனு அளிப்பதற்காக கோமதி தனது மகளுடன் ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் அலட்சியமாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

முழுக் கட்டணத்தையும் வழங்கிய தி.மு.க நிர்வாகி வி.எஸ்.ஞானவேலன்

இதனால் மிகுந்த மனவேதனையடைந்த கோமதி, தான் மறைத்து எடுத்து வந்திருந்த பெட்ரோலைத் தன் உடல்மீது ஊற்றிக்கொண்டு ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தீக்குளிக்க முயன்றார்.

இதைக் கண்ட பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு, அவர் மீது தண்ணீரை ஊற்றித் தீக்குளிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, கோமதியிடம் இருந்து மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அனுப்பி வைத்தார்.

கைகொடுத்து உதவிய தி.மு.க நிர்வாகி

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ஆலங்காயம் தி.மு.க மேற்கு ஒன்றியச் செயலாளர் வி.எஸ்.ஞானவேலன், உடனடியாக மாணவி மற்றும் அவரது பெற்றோரை நேரில் அழைத்துப் பேசினார். `மாணவியின் படிப்பு எந்தக் காரணத்தைக் கொண்டும் தடைப்படக் கூடாது’ எனத் தெரிவித்த அவர், மூன்றாம் ஆண்டுக் கல்விக் கட்டணமான 60,000 ரூபாய் பணத்தை உடனடியாக ரொக்கமாக வழங்கினார்.

அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டுக்கான கல்விக் கட்டணம் 45,000 ரூபாயையும் தானே முழுமையாக ஏற்பதாக உறுதியளித்து அவர்களை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தார். அரசு உதவி கிடைக்காமல் தவித்த மாணவிக்கு, தி.மு.க பிரமுகர் ஒருவர் முன்வந்து உதவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

திருச்சி: நியாய விலைக் கடை அரிசியில் ரூ.22.20 கோடி முறைகேடு; குடும்பமே கைதான பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பொய்கைப்பட்டியில் சண்முகம் (வயது: 57) என்பவருக்குச்...

"எனக்கு சொந்தக் கார் இல்லை; முதல் வகுப்பில் பயணிப்பதால்…" – GR சுவாமிநாதனுக்கு சு.வெங்கடேசன் பதில்

பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள ஊழலின் பாவம் போக வேண்டும் என்றால் 'மகா...

"என் அம்மா 3 முறை புற்றுநோயை எதிர்கொண்டவர்; ஆனால்…" – சோனியா காந்தி குறித்து ராகுல் எமோஷனல்

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி​யின் வாழ்க்கை அனுபவங்​கள், ‘பிலாங்​கிங்: ஏ...