12
October, 2026

A News 365Times Venture

12
Monday
October, 2026

A News 365Times Venture

TVK: தவெக இரண்டாமாண்டு தொடக்க விழாவில் பத்திரிகையாளரைத் தாக்கிய பவுன்சர்கள்; வலுக்கும் கண்டனம்!

Date:

விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்த நிலையில், அதன் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில், கட்சியின் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, கொள்கைப் பரப்புச் செயலாளர் ராஜ்மோகன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் சிறப்பு விருந்தினராகத் தேர்தல் வியூக வகுப்பாளரும் பீகார் ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனருமான பிரசாந்த் கிஷோரும் கலந்துகொண்டார்.

தவெக – விஜய், பிரசாந்த் கிஷோர்

இவ்வாறிருக்க, இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ஒருவரை பவுன்சர்கள் தாக்கிய சம்பவம் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் கண்டனம் தெரிவித்திருக்கும் சென்னை பத்திரிகையாளர் மன்றம், “தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நிகழ்வில் பத்திரிகையாளர்கள் மீது பவுன்சர்கள் மார்பு மற்றும் முகத்தில் கொலைவெறித் தாக்குதல். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி.

பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களைப் பாதுகாக்கும் த.வெ.க நிர்வாகிகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு த.வெ.க தலைவர் விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் உடந்தையாக இருந்த நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்க மன்றம் உறுதுணையாக இருக்கும்.” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறது.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'உதயநிதி களமிறக்கிய 750 பேர்.!' – இடைத்தேர்தலில் திமுக புது பார்முலா!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் இரண்டாம் இடம் பிடித்ததோடு கூட்டணி இல்லாமலும் நம்பிக்கை...

Musk Vs Ambani: இந்தியாவின் டிஜிட்டல் சிம்மாசனத்திற்கு நடக்கும் யுத்தம் – இணையப் போரின் பின்னணி!

ஒருபுறம் இந்தியாவின் தொலைத்தொடர்பு சாம்ராஜ்யத்தை தன் கைக்குள் வைத்திருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின்...

டெல்லி: `ஜந்தர் மந்தரில் போராட்டங்களுக்குத் தடை' – மத்திய அரசின் முடிவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்!

டெல்லியில் இதுவரை முதன்மைப் போராட்டக் களமாக இருந்த மத்திய டெல்லியின் ஜந்தர்...

“ம.ச.வெ கூட்டணிக்கு விசிக ஒரு முக்கியத் தூண்" – விசிகவுக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்!

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த...