9
September, 2026

A News 365Times Venture

9
Wednesday
September, 2026

A News 365Times Venture

TVK : 'அவப்பெயர் ஏற்படும்' – குழம்பி தெளிந்த விஜய் ; மாலை வெளியாகும் வேட்பாளர் அறிவிப்பு?

Date:

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியிருக்கிறது. முதல் கட்சியாக திமுக தங்களின் வேட்பாளர்களை அறிவித்திருக்கும் நிலையில், தவெக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று மாலை முதல்வர் விஜய் அறிவிக்கவிருப்பதாக தகவல்.

இடையில் தவெக முகாமில் ஒரு பெரிய குழப்பமே எழுந்து அடங்கியிருப்பதாகவும் தகவல் சொல்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

மரகதம் குமாரவேல்

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய தவெகவின் சீனியர்கள் சிலர், ‘அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்து தவெகவுக்கு வந்த போதே அவர்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என உறுதி கொடுக்கப்பட்டது. தலைவரும் இடைத்தேர்தலில் ராஜினாமா செய்தவர்களையே நிறுத்தி வென்றுவிடலாம் என நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், இடையில் அதிமுகவினர் பதவி விலகி தவெகவுக்கு வருவது ‘குதிரை பேரம்’ என பெருத்த விமர்சனத்தை கிளப்பியது. எதிர்க்கட்சிகள் கூட்டாக ‘குதிரை பேரம்’ என விமர்சிப்பதால் இடைத்தேர்தலில் மீண்டும் ராஜினாமா செய்தவர்களுக்கே வாய்ப்புக் கொடுத்தால் கெட்டப் பெயர் ஆகிவிடும் என சிலர் முதல்வரிடமே அறிவுரை கூறியிருக்கின்றனர்.

முதல்வரும் ‘குதிரை பேர’ விமர்சனத்தை கருத்தில் கொண்டிருக்கிறார். அதனால்தான் மதுராந்தகம், தாராபுரம் தேர்தல் அறிவிப்பு வந்த உடனேயே தன்னுடைய சகாக்களிடமும் இது குறித்து பேசியிருக்கிறார். அதில் மதுராந்தகத்தில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், தாராபுரத்தில் போட்டியிட்ட சத்யபாமா இருவரில் ஒருவருக்கு மட்டும் சீட் கொடுத்தால் என்ன? இன்னொரு தொகுதிக்கு கட்சி ஆளே இறக்குவோமே என ஒரு ஐடியாவும் பேசப்பட்டிருக்கிறது. அப்படி ஒருவருக்குதான் வாய்ப்பு எனில் யாருக்கு வாய்ப்பை மறுப்பது?

சத்யபாமா

இப்படி ஒரு கேள்வி வரவே, மரகதம் குமரவேல்தான் கட்சியில் சேர்ந்தவுடனேயே தொகுதிக்குள் செலவு செய்து பணியை தொடங்கிவிட்டார். அவருக்கு சீட்டை மறுக்க முடியாது. எனில், சத்யபாமாவை கழட்டி விடலாமா என்றும் பேசப்பட்டிருக்கிறது. அப்போதுதான் இன்னொரு கருத்தும் முதல்வரின் முன் வைக்கப்பட்டது. தாராபுரத்தில் தவெகவுக்கு செல்வாக்கு கிடையாது. தேர்தலில் மூன்றாமிடம்தான் பிடித்தோம். மேலும், போட்டியிட ஆள் இல்லாமல் ‘கழக நிர்வாகி’ ஒருவரைத்தான் நிறுத்தினோம். இப்படியிருக்க அந்த தொகுதியில் போய் ரிஸ்க் எடுத்தால் ஆபத்தாகிவிடும். மேலும், இன்னும் நம்மை நம்பி பல அதிமுக சீனியர்கள் கட்சியை விட்டு வர தயாராக இருக்கின்றனர். சத்யபாமாவை கழட்டிவிட்டால் அது தவெகவுக்கு வர தயாராக இருக்கும் அதிமுகவினருக்கு அவநம்பிக்கையை கொடுக்கும் என சிலர் விளக்கிக் கூறியிருக்கின்றனர். இதையும் கருத்தில் கொண்ட முதல்வர் மரகதம் குமரவேல், சத்யபாமாவின் பெயர்களையே டிக் அடித்திருக்கிறார்’ என்கின்றனர்.

அறிவாலயத்துக்கு முன்பாக வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தவெக குறியாக இருந்திருக்கிறது. இறுதி நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தால்தான் வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகிவிட்டது என்கின்றனர். முதல்வர் விஜய் நாளை இரவு வெளிநாட்டுக்கு செல்லும் நிலையில் இன்று மாலையே தவெகவின் வேட்பாளர் அறிவிப்பு வெளியாகக்கூடும் என்கின்றனர்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

"பிரதமர் வேட்பாளரை இந்தியா கூட்டணிதான் முடிவு செய்யும்"- தவெக கூட்டத்திற்குப் பிறகு மாணிக்கம் தாகூர்

நேற்று முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, தவெக தரப்பிலிருந்து ‘2029-ம் ஆண்டு...

`மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி' – உதயமானது தவெக தலைமையிலான புதிய கூட்டணி!

இன்று (செப்டம்பர் 9) பனையூரில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக் கட்சிகளின்...

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' – வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும்...

‘அதுவே பழகிடும்’ ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலைப் பழகிக்கொண்ட உலக நாடுகள்; இப்போது எப்படி சமாளிக்கின்றன?

அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை...