27
June, 2026

A News 365Times Venture

27
Saturday
June, 2026

A News 365Times Venture

Trump: 'அமெரிக்க கல்வித்துறையை கலைக்க கையெழுத்திட்ட ட்ரம்ப்…' – காரணம் என்ன?!

Date:

நேற்று அமெரிக்க அரசின் கல்வித்துறையைக் கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

அமெரிக்க கல்வி மையங்களில் மூன்றாம் பாலினம் பற்றி போதிக்கிறார்கள், போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள் போன்ற பல விஷயங்களுக்கு அமெரிக்க கல்வித்துறையை கடுமையாகச் சாடி வந்தார் ட்ரம்ப். தேர்தல் பிரசாரத்தின்போது, தான் அதிபரானால் அமெரிக்க கல்வித்துறையைக் கலைப்பேன் என்ற வாக்குறுதியைக் கூறியிருந்தார் ட்ரம்ப். சொன்னதை தற்போது செய்துள்ளார்.

இந்தத் துறையை கலைத்ததற்கு ட்ரம்ப் கூறும் காரணம், “பிற நாடுகளை விட, அமெரிக்கா கல்விக்காக அதிக செலவுகளை செய்து வருகிறது. அமெரிக்க கல்வித்துறை என்று ஒன்று இருந்தும், அமெரிக்க மாணவர்கள் கல்வி பட்டியலில் மிகவும் கீழே தான் உள்ளார்கள்” என்பதாகும்.

காரணம் என்ன?!

இவரின் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருமா என்பது பெரிய சந்தேகம் தான். அரசு சார்ந்த ஒரு துறையை கலைக்கும்போது, அதற்கு கண்டிப்பாக காங்கிரஸின் ஆதரவும் வேண்டும். அமெரிக்க கல்வி துறையை கலைக்கும் உத்தரவிற்கு காங்கிரஸின் ஆதரவு கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

இன்னொரு பக்கம், இந்தத் துறையை கலைத்தால் அமெரிக்காவில் கல்வியின் எதிர்காலம், கல்வி கடன்களை வழங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் எழும். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.

ஆக, இது அமலுக்கு வருமா…வராதா என்பது காங்கிரஸ் முடிவை பொறுத்தது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`மாணவர்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கு' – சாதி பெயருடன் ஐ.டி கார்டு விவகாரம்; விளக்கமளித்த செங்கோட்டையன்

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சாதி...

"மாணவர்கள் அனைவரும் சமம்!" – பள்ளி ID கார்டுகளில் சாதி பெயர் சர்ச்சை குறித்து செங்கோட்டையன் விளக்கம்

நேற்று (ஜூன் 26, 2026) ஈரோடு கோபி செட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய...

டெல்லி பிரதிநிதி சர்ச்சை: 'தவெகவில் ஒருவர்கூட தகுதியானவர் இல்லையா?' – கனிமொழியின் இரண்டு கேள்விகள்!

ஜனநாயகன் திரைப்படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணனை தமிழ்நாட்டின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக...

திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறோம்: 9 ஆண்டுகள் ஏன் கூட்டணி; இப்போது ஏன் பிரிவு? – மதிமுக விளக்கம்

இன்று சென்னை அண்ணா நகரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 32-வது...