22
September, 2026

A News 365Times Venture

22
Tuesday
September, 2026

A News 365Times Venture

Trump: `கோல்டன் டோம்' `விண்வெளியில் இருந்து தாக்கினால்கூட…'- ட்ரம்ப் அறிவித்த புதிய ராணுவ தளவாடம்

Date:

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்க ராணுவத்தில், ‘கோல்டன் டோம்’ என்கிற அதிநவீன ராணுவ தளவாடம் ஒன்றைச் சேர்க்கவுள்ளார்.

இதன் மொத்த மதிப்பு கிட்டதட்ட 175 பில்லியன் டாலர். ஆரம்பகட்டமாக, இந்தத் தளவாடத்திற்கு 25 பில்லியன் டாலர் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில், “அமெரிக்க ராணுவத்திற்காக அதிநவீன ஏவுகணைத் தடுப்பு அமைப்பு கட்டப்படும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது, அமெரிக்க மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தேன். அந்த அதிநவீன அமைப்பிற்கான டிசைனைத் தேர்ந்தெடுத்துவிட்டோம் என்று இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதில் எனக்கு மகிழ்ச்சி.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் | கோல்டன் டோம்

கோல்டன் டோம் முழுவதும் கட்டமைக்கப்பட்ட பின், உலகத்தின் அடுத்த பக்கத்தில் இருந்து அல்லது விண்வெளியில் இருந்து கூட ஏவுகணையை ஏவினாலும், அது அமெரிக்காவில் விழாதப்படி இந்த அமைப்பு தடுத்துவிடும்.

இந்த அமைப்பு நமது வெற்றிக்கும், நமது நாட்டிற்கும் மிக முக்கியமானது.

இந்த முயற்சியை அமெரிக்காவின் விண்வெளிப் படை ஜெனரல் மைக்கேல் குட்லின் தலைமையேற்று நடத்துவார். இந்த முயற்சியில் பங்கு கொள்ள கனடா விருப்பம் தெரிவித்துள்ளது” என்று வெள்ளை மாளிகையில் பேசியிருந்தார்.

இதன் பட்ஜெட் கிட்டத்தட்ட 175 பில்லியன் டாலர் என்று ட்ரம்ப் அறிவித்திருந்தார். ஆனால், அமெரிக்க காங்கிரஸ் பட்ஜெட் அலுவலகம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு இந்தக் கோல்டன் டோமால் ஆகும் செலவு 161 பில்லியன் – 542 பில்லியன் டாலர் என்று கணக்கிட்டுள்ளது.

இந்த கோல்டன் டோம் கப்பல் ஏவுகணைகள், பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள், டிரோன்கள் என எந்த ஏவுகணையாக இருந்தாலும், அதுவும் அவை சாதாரணமானது அல்லது அணு ஆயுதம் என எதுவாக இருந்தாலும் தோற்கடிக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டு கட்டமைக்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இது கிட்டதட்ட இஸ்ரேலின் ‘ஐரான் டோமை’ போன்றதாகும். ஆனால், அமெரிக்காவின் கோல்டன் டோம் கட்டமைப்புக்கு ரஷ்யா மற்றும் சீனா முன்னரே எதிர்ப்புகளை பதிவு செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

மதுரை பள்ளி மாணவன் உயிரிழப்பு விவகாரம்: 16 நாள்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட உறவினர்கள்!

மதுரை ஆனையூர் கூடல்புதூர் வானவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் 11-ம் வகுப்பு...

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" – வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று...

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி – என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47)....

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி – காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல்...