8
August, 2026

A News 365Times Venture

8
Saturday
August, 2026

A News 365Times Venture

Trump : 'தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' – அமெரிக்காவுக்கு வெளியே தயாரிக்கும் படங்களுக்கு 100% வரி

Date:

‘அமெரிக்காவின் உற்பத்தியை ஊக்குவிக்கிறேன்…’, ‘அமெரிக்காவின் பொருட்களை ஊக்குவிக்கிறேன்…’ போன்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ‘மேக் அமெரிக்கா கிரேட் அகைன்’ பிரசார வரிசையில், ‘அமெரிக்கப் படங்களும்’ தற்போது இடம்பெற்று விட்டன.

நேற்று ட்ரம்ப் அமெரிக்காவில் திரையிடப்படும் அமெரிக்காவில் தயாரிக்கப்படாத படங்களுக்கு 100 சதவிகித வரி விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

இது குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், “அமெரிக்காவின் திரைத்துறை வேகமாக இறந்து வருகிறது. பிற நாடுகள் நமது படத் தயாரிப்பாளர்களையும், ஸ்டூடியோக்களையும் அமெரிக்காவில் இருந்து கொண்டு செல்ல அனைத்து விதமான சலுகைகளையும் தருகின்றன.

ட்ரம்ப்

அமெரிக்காவைச் சேர்ந்த ஹாலிவுட் மற்றும் பிற பகுதிகள் பெரிதாக அழிந்து வருகின்றன. இது மற்ற நாடுகளின் ஒருங்கிணைந்த முயற்சி மற்றும் நம் தேசத்திற்கான பாதுகாப்பு அச்சுறுத்தலாக உள்ளது.

மேலும், இது ஒரு வகை பிரசாரம் ஆகும். அதனால், வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, நம் நாட்டிற்குள் வரும் படங்களுக்கு 100 சதவிகித வரி விதிப்பை உடனடியாக தொடங்குமாறு வணிகத் துறை மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுக்கு உத்தரவிடுகிறேன்.

அமெரிக்காவில் மீண்டும் படங்கள் தயாரிக்கப்பட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

’பாட்டிலுக்கு பத்து ரூபாயை ஒழிப்பதற்கே ஆன்லைன் பரிவர்த்தனை’ – அமைச்சர் விக்னேஷ் விளக்கம்!

கோவை விமான நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ்...

2021 – 2026: பிரதமர் மோடியின் வெளிநாடு பயணங்கள்! எவ்வளவு செலவு தெரியுமா?

2021 முதல் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து குறைந்தது...

அமெரிக்கவிடம் குறைந்த ஆயுதங்கள்! பீட் ஹெக்செத்தை சாடிய ட்ரம்ப்? ட்ரம்ப் ஏன் பின்வாங்குகிறார்?

ஈரான் போர் தொடங்கிக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் முடிந்துவிட்டது. ஈரானும் சரி......

மயிலாடுதுறை சந்திப்பு: புது கழிவறைக்கு பூட்டு; பழைய கழிப்பறையால் போக்குவரத்து நெரிசல்; மக்கள் சிரமம்

மயிலாடுதுறை ரயில் சந்திப்பானது மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களின் நெடுந்தூரப் போக்குவரத்திற்கு...