5
August, 2026

A News 365Times Venture

5
Wednesday
August, 2026

A News 365Times Venture

TN Budget: "5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்"- தங்கம் தென்னரசு

Date:

தவெக அரசு 2026 – 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவர், “தவெக அரசின் நிதி நிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது. தவெக-வின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை.

தமிழ்நாடு பட்ஜெட்

நிதி அமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பாக நான் அப்போது தந்த விளக்கம் இப்போதும் சரியாக உள்ளது. அரசின் கடன் உயரும் என்று கூறினேன். நிதித் துறை செயலர் தனது விளக்கத்திலும் அதையே கூறியிருக்கிறார்.

தவெக அரசு 3 மாதங்களில் ரூ.22,000 கோடியை கடனாக வாங்கிய நிலையில், 5 ஆண்டுகள் முடியும்போது ஒட்டுமொத்த கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.

திமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களுக்கு இன்று முலாம் பூசப்பட்டு வேறு பெயரில் கொண்டு வரப்பட்டு இருக்கிறதே ஒழிய, அதற்கான உரிய நிதியைக்கூட பெருமளவில் விடுவிக்கவில்லை.

தவெக அரசின் முதல் பட்ஜெட்
தவெக அரசின் முதல் பட்ஜெட்

தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்த்துப் போகச் செய்துள்ளது. தவெக-வின் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் இடம் பெறவில்லை. திமுக அரசு என்ன தந்ததோ அதையேதான் தவெக, பட்ஜெட்டில் தந்திருக்கிறது” என்று சாடியிருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஆட்சி மாறியும் அரசின் கடன் தொடர்கிறது? – தவெக அரசின் ரூ.1.73 லட்சம் கோடி கடன் திட்டம்!

2026-2027ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாடு அரசு புதிய கடனாக ரூ.1...

இரண்டு மசோதாக்கள் அமல்படுத்த பாஜகவின் பிளான்; ராகுலை சந்தித்த கிரண் ரிஜிஜு – ராகுல் சொன்ன 'நோ'!

தற்போது டெல்லியில் மழைக்கால நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதை யாராவது...

"வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக அள்ளி வீசிவிட்டு, இப்போது..!"- பட்ஜெட் குறித்து சீமான்

"மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் ஆக்கப்பூர்வத் திட்டங்களோ, மாநிலத்தின் நிதிச்சுமையைக் குறைக்கும் மாற்றுப்பொருளாதாரப்...

'EVM மெஷின்ல எந்த கோளாறும் இல்ல…' – ஸ்டாலினின் கொளத்தூர் 'தேர்தல் புகார்' முடித்து வைப்பு!

கொளத்தூர் தொகுதியின் 14 பூத்களின் EVM மெஷின்களை சரிபார்க்கும் பணி கடந்த...