13
June, 2026

A News 365Times Venture

13
Saturday
June, 2026

A News 365Times Venture

"Tasmac நிறுவனத்தை முடக்க முயற்சி" – அமலாக்கத்துறை மீது அமைச்சர் முத்துசாமி குற்றச்சாட்டு

Date:

ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே உள்ள லட்சுமி நகர் பகுதியில் காலிங்கராயன் கால்வாய் பகுதியில் பேபி கால்வாய் உள்ளது.

அக்கால்வாயை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ரூ.28 லட்சம் செலவில் தூர்வாரும் பணியை தமிழக வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசுகையில், “டாஸ்மாக் வழக்கை உச்ச நீதிமன்றம் கூர்ந்து கவனித்து, சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. டாஸ்மாக் மட்டுமல்ல, அரசின் எந்தத் துறையிலும் தவறு நடக்கக் கூடாது என முதல்வர் தெளிவாக உள்ளார்.

டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளை அமலாக்கத்துறை நடத்திய விதம் வருத்தத்திற்குரியது. டாஸ்மாக் நிறுவனத்தை முடக்கும் விதமாக அமலாக்கத்துறை நடவடிக்கை உள்ளது,” என்று கூறினார்.

அமைச்சர் முத்துசாமி

முதல்வர் ஸ்டாலின் எடுத்த முன்னெடுப்புக்கு நியாயம் இருப்பதை, உச்ச நீதிமன்ற உத்தரவு காட்டுகிறது.

அரசியலமைப்புச் சட்டம்தான் எல்லாவற்றிற்கும் உயர்வானது என்பதை இந்தத் தீர்ப்பு உத்தரவு சுட்டிக்காட்டியுள்ளது.

டாஸ்மாக்கில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, தமிழக அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால், எந்த ஆதாரமும் இல்லாமல் டாஸ்மாக் நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது.

இது தவறான அணுகுமுறையாகும். அமலாக்கத்துறை கூறும் அளவுக்கு தவறுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

ஈரான்: "24 மணிநேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்" – பாகிஸ்தான் பிரதமர் அறிவிப்பு

ஈரான் போர் முடிவுக்கு வருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதில் இருந்து நீண்ட...

'விஜயதாரணி, பச்சைமால், பாலகங்கா…' – தவெகவில் இணைந்த மாற்றுக் கட்சி நிர்வாகிகளின் இன்றைய லிஸ்ட்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் மாற்றுக் கட்சியினர் பலர்...

கிருஷ்ணகிரி நகர்மன்றக் கூட்டம்: முன்னாள் முதல்வர்களின் படங்களை வைக்க போட்டிப் போட்ட திமுக – அதிமுக!

கிருஷ்ணகிரி நகராட்சிக் கூட்ட அரங்கத்தில் முன்னாள் முதல்வர்களின் படங்களை வைப்பது தொடர்பாக...

Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?

சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள்...