23
April, 2026

A News 365Times Venture

23
Thursday
April, 2026

A News 365Times Venture

Talks: அமெரிக்கா ரெடி; அதிருப்தி ஈரான்! இஸ்லாமாபாத் மீது உலக நாடுகளின் பார்வை – 'குட்டி' Summary

Date:

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா – ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடக்கவிருக்கிறது.

நாளையோடு (இந்திய நேரப்படி) தற்காலிக போர் நிறுத்தம் முடிவடைகிறது. இந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தாலோ… அல்லது பாதி நிபந்தனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டாலோ தான், ஒன்று நிரந்தர போர் நிறுத்தம் வரும்… அல்லது தற்காலிக போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்.

அதனால், உலக நாடுகள் அனைத்தும் இஸ்லாமாபாத்தை இப்போது உற்றுநோக்கி வருகின்றனர்.

அமெரிக்கா, ஈரான்

இன்று அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத் செல்கின்றனர்.

JD Vance | ஜே.டி வான்ஸ்

ஈரான் தரப்பில் இருந்து நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி செல்லலாம் என்று கூறப்படுகிறது.

ஈரான் தன்னிடம் இருக்கும் செறிவூட்டிய யுரேனியத்தை தந்துவிட வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறது. ஆனால், அதை அமெரிக்கா முடிவு செய்ய முடியாது என்று கூறுகிறது ஈரான்.

ஈரானின் துறைமுகத்தை முற்றுகையிட்டுள்ளது அமெரிக்கா. ஈரானின் ‘தூஸ்கா’ (TOUSKA) என்ற கப்பலைக் கைப்பற்றியுள்ளது அமெரிக்கா – இதில் மிகப்பெரிய அதிருப்தியில் உள்ளது ஈரான்.

ஆனால், இரு தரப்பும் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவை எட்ட நினைக்கின்றன.

முக்கியமாக, இரு தரப்பிலும், ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஒரு பிடிப்பாக பார்க்கிறது ஈரான். ஹார்முஸ் ஜலசந்தி மூடியிருப்பதால் உலக நாடுகளின் அழுத்தம் அமெரிக்கா பக்கம் திரும்புகின்றன.

பேச்சுவார்த்தை சுமூகமாக இல்லையென்றால்…

இன்றைய பேச்சுவார்த்தையில் ஒரு சில நல்ல முடிவுகள் எடுக்கப்படும்… உடன்படாத நிபந்தனைகள் பின்னர் ஆலோசிக்கப்படும் என்று கருதப்படுகிறது. ஆக, பேச்சுவார்த்தை பாசிட்டிவாக தான் முடியும் என்று பெரும்பாலும் நினைக்கப்படுகிறது.

ஒருவேளை, பேச்சுவார்த்தை சுமூகமாக முடியவில்லை என்றால், “பல வெடிக்குண்டுகள் ஈரான் மீது கொட்டும்” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

'ஒரு தொகுதியில் ஒரே பேர்ல 10 வேட்பாளர்கள் இருந்தாலும் குழப்பம் இருக்காது' – தேர்தல் ஆணைய ஏற்பாடுகள்

இன்னும் இரண்டு நாள்களில் 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல். வாக்காளர்களுக்கு...

Iran: "அச்சுறுத்தல்களின் நிழலில் பேச்சுவார்த்தை நடக்காது" – ஈரான் என்ன சொல்கிறது?

இந்திய நேரப்படி, நாளை அதிகாலை அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்...

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்!  வாக்குபதிவு முன்னேற்பாடுகள்!

நெல்லை: வாழைமரம், மாவிலைத் தோரணங்கள்!பிங்க், ஊதா நிற வாக்குசாவடிகள்!  வாக்குபதிவு முன்னேற்பாடுகள்! Source link

கோவை தெற்கு: "23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை மக்கள் கிழிப்பார்கள்" – அண்ணாமலை காட்டம்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வானதி சீனிவாசனின் இறுதி...