26
October, 2026

A News 365Times Venture

26
Monday
October, 2026

A News 365Times Venture

Serbia: கிளர்ந்தெழுந்த மாணவக் கூட்டம்; GenZ-யிடம் ஆட்சியை இழந்த பாரம்பரியக் கட்சி! – பின்னணி என்ன?

Date:

செர்பியாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் Student List கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது.

செர்பியாவை கடந்த பத்து ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த அலெக்சாண்டர் வுசிச்சின் அரசியல் பயணத்துக்கு மாணவர்கள் தொடங்கிய அரசியல் அணி முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது. 2024-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி நோவி சாட் ரயில் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 16 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்துக்கு அரசின் ஊழலே காரணம் என இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தொடங்கியது.

பேராசிரியர் இலியா ஸ்ர்டானோவிக் தலைமையிலான இப்போராட்டம், ‘Student List’ என்ற வலுவான அரசியல் கொள்கைத் தளமாக உருவெடுத்தது. மாணவர் போராட்டங்களின் அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து, 2026 செப்டம்பரில் வுசிச் தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்து, முன்கூட்டிய நாடாளுமன்றத் தேர்தலை அறிவித்தார்.

Serbia: Student List

250 இடங்கள் கொண்ட செர்பியா நாடாளுமன்றத்தின் தொகுதிகளில் ‘Student List’ கட்சி 135 முதல் 140 இடங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது. வுசிச்சின் ‘செர்பிய முற்போக்குக் கட்சி’ 105 இடங்களை மட்டுமே பெற்றதால், வுசிச் தனது தோல்வியை முறைப்படி ஒப்புக்கொண்டார். இதன் மூலம் செர்பியாவில் அவரது 12 ஆண்டுகால அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த 30 ஆண்டுகால நாடாளுமன்றத் தேர்தலில் இல்லாத அளவிற்கு வாக்காளர்கள் திரண்டு வாக்களித்தனர்.

இந்தத் தேர்தல் முடிவு வெறும் நாடாளுமன்ற இடங்களின் மாற்றமாக மட்டும் பார்க்கப்படாமல், செர்பியாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் கட்சிக்கு மக்கள் அளித்த பலத்த அடியாகக் கருதப்படுகிறது. பல்கலைக்கழக வளாகங்களில் தொடங்கிய இப்போராட்டம், அரசில் நிலவிய ஊழல் குற்றச்சாட்டுகள், ஊடகச் சுதந்திரமின்மை மற்றும் அரசின் பொறுப்பற்ற தன்மைக்கு எதிரான மக்களின் குரலாக மாறியது. இளைஞர்கள் மட்டுமல்லாது, நகரப்புற நடுத்தர மக்கள் மற்றும் தற்போதைய அரசியல் அமைப்பின் மீது அதிருப்தியில் இருந்த வாக்காளர்கள் அனைவரும் மாணவர் இயக்கத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

அலெக்சாண்டர் வுசிச்
அலெக்சாண்டர் வுசிச்

கடந்த பல ஆண்டுகளாகத் தனது வலுவான அமைப்பு பலம், ஊடகக் கட்டுப்பாடு மற்றும் தனிப்பட்ட அரசியல் ஆதிக்கம் ஆகியவற்றின் மூலம் செர்பிய அரசியலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அதிபர் வுசிச்சிற்கு இந்தத் தோல்வி மிகப்பெரிய அரசியல் பின்னடைவாகும். இனி அவரது அரசியல் செல்வாக்கு பெருமளவில் குறையும் என கூறப்படுகிறது.

வாக்குறுதிகளை அளித்துத் தேர்தலில் வெற்றிபெறுவது எளிது என்றாலும், இனி நாட்டைக் கொண்டு நடத்துவதே Student List இயக்கத்திற்கு முன்னுள்ள மிகப்பெரிய சவாலாகும். நாட்டின் பொருளாதாரம், வெளியுறவுக் கொள்கை, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவது, கொசோவோ பிரச்சனை, ஆற்றல் துறை, மற்றும் ரஷ்யா-சீனாவுடனான உறவுகள் போன்ற முக்கியமான விவகாரங்களில் அவர்கள் எடுக்கப்போகும் முடிவுகளே அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.

Student List
Student List

இந்த வெற்றியின் மூலம் செர்பிய அரசியலில் ஒரு புதிய தலைமுறை உருவெடுத்துள்ளது. நீதித்துறை சுதந்திரம், ஊழல் தடுப்பு, ஊடகச் சுதந்திரம் ஆகியவற்றில் புதிய அரசு பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர். செர்பியாவில் புதிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ள மாணவர்கள், நாட்டை எவ்வாறு வழிநடத்தப் போகிறார்கள் என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

அம்மா குடிநீர்: “தனியார்மயத்தை மறைமுகமாக ஊக்குவிக்கும் தவெக அரசு?" – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

ஏழை, எளிய மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்து வந்த அம்மா...

''நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்'' – அன்பில் மகேஸ் கைது குறித்து காவல்துறை விளக்கம்!

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்ட செய்தி இப்போது...

அன்பில் மகேஸ்: `அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது; சட்டப்படி எதிர்கொள்வார்!'- கைதுக்கு ஸ்டாலின் கண்டனம்

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையில், தனியார்ப் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100...