14
June, 2025

A News 365Times Venture

14
Saturday
June, 2025

A News 365Times Venture

Seeman: "பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை அண்ணா" -சீமான்

Date:

சீமானும் தொடர்ச்சியாக தந்தை பெரியார் பற்றிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது சர்ச்சைகளை ஏற்படுத்திய வண்ணமிருக்கிறது.

பெரியார் பற்றிய கடுமையான விமர்சனங்களுக்கு உரிய ஆதாரங்களை சீமான் காட்ட வேண்டும் என்று மே 17 இயக்கம் சார்பில் பெரியாரிய அமைப்புகள் ஒன்றிணைந்து சீமானின் வீட்டை ஜன22ம் தேதி முற்றுகையிட்டு எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். இப்போது பரபரப்பாகி இருக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலிலும் சீமான், பெரியார் குறித்துப் பேசியது வாக்குச் சேகரிப்பின் போது மோதல்களை ஏற்படுத்தியிருந்தது.

பெரியார் – அண்ணா

இந்நிலையில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் சீமான், “பெரியாரை எதிர்த்து முதன் முதலாகத் தனி அரசியல் இயக்கம் கண்டு வென்ற பெருந்தகை..! பணம் கொடுத்து வாக்கைப் பறிக்கும் ஈனர்களிடம், தங்களின் சனநாயக உரிமையை அறியாமையால் ஏமாறும் மக்களைக் கண்டு ‘தங்கத்தை யாராவது தவிட்டுக்கு விற்பார்களா? என்று நெஞ்சம் கொதித்த இலட்சியவாதி..! ‘மதுவை விற்று வரும் வருமானம் குஷ்டரோகியின் கையில் வெண்ணெய்க்கு ஈடானது, என்று கூறி மதுவிலக்கை தன் உயிருள்ளவரை விலக்க மறுத்த மக்கள் தலைவர்..!

நேர்மையையும், சுய ஒழுக்கத்தையும், கொள்கைப்பற்றுறுதியையும் இனம்கண்டு, ‘தம்பி வா தலைமையேற்க வா’ என்று தனக்கடுத்துத் தலைமை பொறுப்பேற்க நாவலர் நெடுஞ்செழியனை அழைத்த நேர்மையாளர்..! தமிழ் இலக்கியமும், தமிழர் வரலாறும் அரசியல் மேடைகளிலும் அதிகம் பேசப்படக்கூடிய வழக்கத்தை உருவாக்கிய பெருமகன்..! அவதூறு பரப்புரைகளும், அரசியல் பழிவாங்கலும் இல்லாது கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்து நாகரீக அரசியல் மேற்கொண்ட பண்பாளர்..! யாரும் படிக்க வைக்காமல் தன்னுடைய முயற்சியால் இரண்டு முதுகலை பட்டம் பெற்ற பேரறிஞர் பெருந்தகை..! தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்களின் பெரும்புகழ் போற்றுவோம்!” என்று பதிவிட்டிருக்கிறார்.


Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

உட்கட்சிக்குள் எழும் எதிர்ப்புகள்; "நீங்கள் காங்கிரஸில் தொடர்வீர்களா?" – சசி தரூரின் பதில்

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு மத்திய அரசு பதிலடி...

RCB Event Stampede : 'ரசிகர்களுக்கு வேகம் தேவைதான், அதேபோல..!' – செல்வப்பெருந்தகை

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வெற்றி கொண்டாட்டத்தில் மக்கள் உயிரிழந்த...

Tatkal: இனி தட்கல் டிக்கெட் எளிதாக கிடைக்கும்; IRCTC-ல் ஆதார் இணைப்பு வருகிறது!

ரயில் டிக்கெட் புக்கிங் நடைமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாக கடுமையாக்கி வருகிறது ரயில்வே...