4
October, 2026

A News 365Times Venture

4
Sunday
October, 2026

A News 365Times Venture

Railway: முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? – ரயில்வே விளக்கம்!

Date:

கும்பமேளா நிகழ்வைத் தொடர்ந்து, டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில், 18 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்திய ரயில்வே துறை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அதற்கடுத்து, தெற்கு ரயில்வேயில் 13 ஜோடி ரயில்களில் பொதுப் பெட்டிகள் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளதாகவும், மூன்றடுக்கு ஏசி பெட்டிகளில் கூடுதலாக பெட்டிகள் சேர்க்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகின.

இதுதவிர, நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் எண்ணிக்கை 4-ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பகிரப்பட்டது.

நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில், “சமூக வலைதளம் முழுக்க ரயில் பரிதாபங்கள் வீடியோக்களைப் பார்த்தோம். அதைப் பார்த்தாவது எளிய மக்களுக்கான முன்பதிவில்லாத பெட்டிகளை அதிகரிப்பார்கள் என்று பார்த்தால், வழக்கம்போல பரிதாபங்களைத்தான் மேலும் கூட்டியுள்ளது ‘ சேடிஸ்ட்’ அரசு” என்று தெரிவித்திருந்தார்.

Railway விளக்கம்

இந்த நிலையில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைப்பதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளது தெற்கு ரயில்வே.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், ” தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் விரைவு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வெளியாகி வரும் செய்திகள் ஆதாரமற்றவை மற்றும் தவறானவை.

“விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகள் பயனடையும் வகையில், பிப்ரவரி மாதம் முதலே பொதுப் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. ஆனால், மகா கும்பமேளா நிகழ்வுக்காக ரயில் பெட்டிகள் தேவைப்படுவதால், கூடுதலாக தயாரிக்கப்பட்ட அனைத்து பெட்டிகளும் இணைத்து, சிறப்பு ரயில்களாக இயக்கப்படுகின்றன.

மகா கும்பமேளா பிப்.26-ம் தேதியுடன் முடிவடைவதையடுத்து, மார்ச் மாதம் முதல் இந்த பெட்டிகள், தெற்கு ரயில்வே சார்பில் விரைவு ரயில்களில் கூடுதலாக இணைத்து இயக்கப்படும். இதற்கான பட்டியலும் தயாராக உள்ளது.

அந்த வகையில், ஈரோடு – சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – ஐதராபாத் இடையே இயக்கப்படும் அதி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – நாகர்கோவில் இடையே இயக்கப்படும் அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்களில் தற்போதுள்ள 3 பொது பெட்டிகள், 4 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.

“இதுதவிர, புதுச்சேரி – மங்களூரு விரைவு ரயில், விழுப்புரம் – கோரக்பூர் விரைவு ரயில், புதுச்சேரி – கன்னியாகுமரி விரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – பாலக்காடு விரைவு ரயில், திருநெல்வேலி – புருலியா விரைவு ரயில்களில் தற்போதுள்ள 3 முன்பதிவு இல்லாத பெட்டிகள், 4 பெட்டிகளாக மார்ச் மாதம் முதல் அதிகரித்து இயக்கப்படும்.

சென்னை சென்ட்ரல் – திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – ஆலப்புழா அதிவிரைவு ரயில், சென்னை சென்ட்ரல் – மைசூர் விரைவு ரயில் ஆகிய ரயில்களில் தற்போதுள்ள 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள், 4-ஆக அடுத்த மாதம் முதல் அதிகரித்து இயக்கப்படும்

மொத்தம் 14 விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் அதிகரித்து இயக்கப்பட உள்ளன. மற்ற ரயில்களிலும் தலா 4 முன்பதிவு இல்லாத பெட்டிகள் வரை அடுத்தடுத்த மாதங்களில் இணைத்து இயக்க ரயில்வே நடவடிக்கை எடுத்து வருகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

தூத்துக்குடி: வல்லநாடு ஆற்றுப் பாலத்தில் 21வது முறையாக விழுந்த ஓட்டை; சீரமைப்பு பணிகளில் மெத்தனம்!

நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை 47 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை...

`தெருக்கோடியில் இருக்கிறது கட்சி!’ – அதிமுகவில் அடுத்த விக்கெட்; தவெகவுக்குத் தாவிய முன்னாள் எம்எல்ஏ

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2011, 2016 தேர்தல்களில்...

மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: “6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்…" – சீமான் காட்டம்

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி...

ஊட்டி: "பஸ் ஃப்ரீ-தான் ஆனா; பஸ் ஸ்டாண்டு டாய்லெட்டுக்கு 10 ரூபாய்" – குமுறும் பெண்கள்

சுற்றுலா மையமாக விளங்கி வரும் நீலகிரி மாவட்டத்தில் போதிய அளவில் பொதுக்கழிப்பறைகள்...