26
June, 2026

A News 365Times Venture

26
Friday
June, 2026

A News 365Times Venture

PMK: இணைந்த தந்தை – மகன் இதயங்கள்! – இக்கட்டில் சேலம் அருள் போன்ற 2-ம் கட்ட தலைவர்கள்?

Date:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், அவரின் மகன் அன்புமணி இடையே நீடித்து வந்த 18 மாத மோதல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. குடும்ப உறுப்பினருக்கு பா‌.ம.க- வில் பதவி வழங்குவதில் தொடங்கி, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா‌.ஜ.க ஆதரவு, சுயேச்சை நிலைப்பாடு வரை தந்தையும் மகனும் எதிரெதிர் துருவங்களில் நின்று வார்த்தைகளால் மோதிக்கொண்டனர்.

ராமதாஸ் – அன்புமணி

ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டாக பிளவுபட்டுக்கிடந்த சூழலில் ராமதாஸ் அணிக்கு பக்கபலமாக நின்றவர் சேலத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ அருள். ராமதாஸின் தீவிர ஆதரவாளராக காட்டிக்கொண்டது மட்டுமில்லாமல், அன்புமணியை கடுமையாக எதிர்த்து பகையை சம்பாதித்தவர்.

தன்னை கட்சியை விட்டு நீக்கியபோதும், “என்னை நீக்க அன்புமணிக்கோ அவரது ஒழுங்கு நடவடிக்கை குழுவிற்கோ அதிகாரம் இல்லை” என்று பகிரங்கமாக சவால் விடுத்தார்.

அன்புமணி ராமதாஸ் தரப்பினர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தது, தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறியது, மற்றும் தேர்தல் நேரத்தில் மாற்று அணியாகக் களம் கண்டது போன்ற தீவிரமாக ராமதாஸ் பக்கம் நின்ற இவருக்கு, இந்த இணைப்பு நெருக்கடியான சூழலை உருவாக்கியிருக்கிறது.

பா.ம.க அருள்

ராமதாஸ் அணி பக்கம் நின்ற பா.ம.க- வைச் சேர்ந்த மூத்த நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், ” தந்தை மகனின் குடும்ப மற்றும் அரசியல் ரீதியான இந்த திடீர் இணைப்பால் இடையில் நின்று தீவிரமாகப் போராடிய அருள் போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்களை அரசியல் ரீதியாக நிராயுதபாணியாக்கியிருக்கிறார்கள். மீண்டும் அன்புமணி தலைமையின் கீழ் தொடர்வது என்பது கடுமையான மன உளைச்சலையும் இக்கட்டான சூழலையும் உருவாக்கும். அரசியலில் மாற்றுப் பாதையைத் தேடும் கட்டாயப்படுத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் அருள்” என்றார்.

இதனிடையே செய்தியாளர்களிடம், “” தந்தை மகன் இருவரிடையே நீடித்த வந்த மோதல் முடிவுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி. இனி இணைந்து செயல்படுவோம்” என அருள் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

`கர்நாடக அரசின் பிராக்ஸி அரசா இந்த அரசு?' – ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனத்திற்கு அதிமுக எதிர்ப்பு

தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட...

'ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு முக்கிய பதவி வழங்கிய முதல்வர் விஜய்!' – விவரம் என்ன?

ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளரான கே.வெங்கட நாராயணாவுக்கு தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி...

ஆதார், பான், பாஸ்போர்ட்டெல்லாம் அல்ல… இவைதான் குடியுரிமைக்கான ஆதாரம்! – மத்திய அரசு சொல்வதென்ன?

'பாஸ்போர்ட் வெறும் போக்குவரத்து ஆவணம் தான்... குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல' -...

`மூக்கைப் பிடிச்சிக்கிட்டு நிற்க வேண்டியிருக்கு' – கோயம்பேடு பேருந்து நிலையத்தின் அவல நிலை!

தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட பிறகு, கோயம்பேடு பேருந்து நிலையம்...