8
May, 2026

A News 365Times Venture

8
Friday
May, 2026

A News 365Times Venture

PMK : 'ராமதாஸ் அய்யா குலசாமி; நான் கட்சித் தலைவர்!' – அன்புமணி திட்டவட்டம்

Date:

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் இன்று பாமக தலைவர் அன்புமணி இரண்டாவது நாளாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார். கூட்டத்தில் பேசிய அவர், ” கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். ஐயா நம்முடைய குலசாமி, குலத்தெய்வம். ஐயா கட்சியின் கொள்கை வழிகாட்டி. 45 ஆண்டுகால ஐயாவின் உழைப்பு இந்தக் கட்சியில் இருக்கிறது.

அன்புமணி – ராமதாஸ்

நான் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன். கட்சியினர் நம்பிக்கையோடு இருங்கள். விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு குழப்பங்களுக்கு முடிவு கட்டுவேன். ராமதாஸ் அய்யா கொள்கைத் தலைவர். அவரின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்போம்.

அவர் நமக்கான வழிகாட்டி. நான் தான் கட்சியின் தலைவர். விமர்சனங்களை புறந்தள்ளிவிட்டு வேலையை பார்க்க வேண்டும். தூசியை தட்டுவதைப் போல விமர்சனங்களை தட்டிவிடுங்கள்.

அன்புமணி ராமதாஸ்
அன்புமணி ராமதாஸ்

நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது. களத்தில் நான் இருக்கிறேன். யாரும் உங்கள் மீது கை வைக்க முடியாது. பொறுப்பை பகிர்ந்துகொள்ளுங்கள் எல்லாவற்றையும் நீங்களே பார்க்க வேண்டும் என்றில்லை. கட்சி யாருடைய சொத்தும் கிடையாது.” என்றார்

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்த சிபிஐ! – ஆதரவு கடிதத்தில் உள்ளது என்ன?

நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய...

TVK: "தவெக மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்" – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேபி பதில்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,...

`உலக நாடுகளுக்கு 10% வரி சட்டத்திற்குப் புறம்பானது' – நீதிமன்ற தீர்ப்பு; மீண்டும் சறுக்கிய ட்ரம்ப்

கடந்த ஏப்ரல் மாதம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது...

கேரளம்: `பாஜக 3 இடங்களை வென்றிருப்பது கவலையளிக்கிறது' – தேர்தல் தோல்வி குறித்து பினராயி விஜயன்

கேரளத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான யு.டி.எஃப் 102...